இயேசுவின் உவமைகளும் உதாரணங்களும் - 4

யேசுவின் உவமைகளும் உதாரணங்களும் -  4
பா. கா. அலெக்ஸ் சகாயரஜ்

நற்செய்திப் பகுதி :       மாற்கு 4: 3,4  (மத்; 13:3,4 , லூக் 8: 5 )
சூழ்நிலை
 கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கி ஒரு படகில் ஏறி உவமைகளின் வாயிலாக போதிக்கும் தருணம்….
உதாரணம்
இதோ, கேளுங்கள், விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும்போது சில விதைகள் வழியோரம் விழுந்தன.”
------------------------
மாற்கு நற்செய்தியாளர் இம்மாததத்திற்கு நமக்கு தியானிக்க கொடுக்கின்ற உதாரணம் விதைப்பவரும் விதையும். கத்தோலிக்க கிறிஸ்தவர்களாகிய நமக்கு மிகவும் அதிகமாக தியானிக்கப்பட்ட அல்லது வாசிக்கப்பட்ட பகுதியாக இப்பகுதி இருப்பதை நாம் பார்க்கிறோம். மாற்கு நற்செய்தியாளர் தனது மூன்றாவது அதிகாரம் வரை இயேசு பல்வேறு விதமான மக்களை சந்திப்பதையும் அவர்களின் தேவைகளை பல்வேறு புதுமைகளோடு பூர்த்தி செய்வதையும் நமக்கு எடுத்தியம்புகிறார். இயேசு இந்த உவமையையும் அதன் உதாரணங்களையும் பயன்படுத்துவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் தென்படுகின்றன
இயேசுவை பின்பற்றிய பெரும்பாலான மக்கள் விவசாய தொழில் புரியும் மக்களாக இருக்கின்றனர். எனவே, விதைத்தல் என்பது அவர்களுக்கு பரிட்சயமான பணி.
இதுவரை அவர் கண்ட மக்கள் புதுமைகளை புசித்தவர்களாக தென்பட்டார்களே ஒழிய கேட்கின்ற இறைவார்த்தையை தியானித்து பலன் தந்தவர்களாக தெரியவில்லை.
இக்காரணங்களின் நிமித்தத்தினால் இயேசு இவ்வுவமையையும் உதாரணங்களையும் நமக்கு எடுத்துரைக்கிறார். விதைக்கப்படுகின்றன விதை இறைவார்த்தையாக அமைகின்றது (லூக்8:11). இறைவார்த்தையை மற்றவரோடு பகிருகின்ற இறைஊழியர் விதைக்கின்றவராக அமைகிறார்(1கொ3:5-9). விதைக்கப்படுகின்ற ஒவ்வொரு விதையும் முளைப்பதற்குமுன் நிலங்கள் நன்முறையில் பண்படுத்தப்பட்டவைகளாக அமைந்திருத்தல் இன்றியதையாத ஒன்றாகும். இயேசு எடுத்தியம்புகின்ற இந்த உதாரணங்கள் மனிதர்களின் நான்கு மனநிலைகளை பிரதிபலிப்பவனவாக அமைகின்றன

1.இறுகிய மனநிலையுடையவர்கள் (மாற்கு4:4,15): இவ்வகை மனிதர்கள் அதிகமாக மிதிபட்ட பாதையைப்போன்று தங்களையே கடினப்படுத்திக்கொண்டு விதையை ஏற்றுக்கொள்ளாமல் தங்களுக்கென்று ஒரு தடுப்பை ஏற்படுத்திக்கொண்டவர்களாக திகழ்கின்றனர்.
2.மேலோட்டமான மனநிலையுடையவர்கள் (மாற்கு4:5-6,16-17);  : இவ்வகை மனிதர்கள் ஆழமில்லா மற்றும் மேலோட்டமான மனநிலையை கொண்டவர்களாகவும், குறுகிய நாட்களே இறைவார்த்தையை வாழ்வாக்குபவர்களாகவும் இருக்கின்றனர்.
3.நெருக்கப்பட்ட மனநிலையுடையவர்கள் (மாற்கு4:7, 18-19)  : இவ்வகை மனிதர்கள் விதையாகிய இறைவார்த்தை ஏற்றுக்கொள்பவர்களாகவும் ஆனால் பல்வேறு உலகக்காரியங்களை பல்வேறு களைகளாகக் கொண்டு நல்விதை பலனளிக்காமல் போவதற்கு அவர்களே காரணர்களாக அமைகின்றனர்.      
4.பலனளிக்கும் மனநிலையுடையவர்கள் (மாற்கு4:8,20) : இவ்வகை மனிதர்கள், வார்த்தை மனுவுருவானார் என்பதற்கேற்ப இறைவார்த்தைக்கு தங்கள் வாழ்வின் மூலம் வாழ்வளிப்பவர்கள். விதைகளாக விதைக்கப்பட்ட iறாவார்த்தைகள் நல்ல விளைச்சலை இவ்வகை மனிதர்களிலே நாம் பார்க்க இயலும்.

கேள்வி
அதிவேகமான உலகிலே தேவையற்ற களைகளப்போல தேவையற்ற தொல்லைகளி;டமிருந்து நல்விதையான இறைவார்த்தையை எப்படி நம்முள் வளர்த்து பலனளிக்கப்போகிறோம் சிந்திப்போம்

- - - - - - - - - - 
கட்டுரையாளர்


No comments:

Post a Comment

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD