கொரோனாவின் பயணமும் நம் பயணமும் - ஓர் எண்ண ஓட்டம்

கொரோனா! கொரோனா
என்ன அழகான அற்புதமான உன்னுடைய பெயர்!!!  கோடிஸ்வரன் முதல் ஏழை வரை அனைவராலும் உசச்ரிக்கும் பெயர்!!! படித்தவன் படிக்காதவன் என்ற பாகுபாடு உனக்கு இல்லை
பரந்த மனம் கொண்ட நீ பறந்து பாரெங்கும் பயமின்றி உலாவி வருகின்றாய்
பயணங்களிலே எளிதான, எளிமையான, விரைவான சலனமில்லாத உனது பயணம். பரந்த மனம் இல்லாத மனிதர்களுக்கு பயம் தரும் உனது பயணம்.
அதே வேளையில் உனக்கு சாவோ வாழ்வோ அதை பற்றி சிறிதும் தயக்கமில்லாத பயணம்.

எல்லா நாடுகளுமே உனக்கு பேருந்து நிலையம், எல்லா மனிதர்களிலும் உள் சென்று பதம் பார்க்கும் பயணம்

இன்றைய நாட்டின் நிலைமை உன்னை வரவேற்பவர்களோ அதிகம் (பலவீனமாணவர்கள், எதிர்மறை சிந்தனையாளர்கள); உன்னை விரட்டுபவர்களோ குறைவு (பலமானவர்கள், நேர்மறை சிந்தனையாளர்கள்). இதைப்பற்றியெல்லாம் கொஞ்சமும் தயக்கமில்லாத பயணம் எதுவரை நீடிக்கும்??? 

உன்னுடைய அமைதியான, அடக்கமான கண்ணிலே காணாத நீண்ட கால வாழ்வு மனிதர்களுக்கு அமைதியில்லா, அவதியான முடிவில்லா சாவு. உலகை மீட்க வந்த கடவுளின் மகனுக்கு அவரால் படைகக் ப்பட்ட மனிதர்கள் முள்முடி (கொரோனா) சூட்டினார்கள். தீயதை செய்யும் உனக்கு முடிசூட்ட யாராலும் முடியவில்லையே 

நீ ஒரு சின்ன கிருமி நாங்களோ பலம் படைத்தவர்கள், திறமை மிக்கவர்கள்; ஆனால் உனக்குமுன் பணபலம், உடல்பலம் ஒன்றும் இல்லாமல் போய்விட்டது.

இத்தனை ஆண்டுகள் இதுவரை யாராலும் புரியவைக்க முடியாத ஓர் இரகசியத்தை நீ இந்த 2020 –ம் ஆண்டில் புரிய வைத்து விட்டாய். அனைத்திலும் வளர்ச்சி அடையத் தெரிந்த எங்களுக்கு எங்கள் உள்னத்துக்குள் தெய்வத்தை வைத்துக் கொள்ள தெரியாமல் போய் விட்டது

உன்னுடைய இந்த மௌன ஊர்வலம் யாருக்கும் புரியாத புதிராக இருகின்றது. அதிலும் உன்னுடைய சிறப்பு குறைந்தது 15 நாட்கள் நீ வசிக்கும் இடத்தில் எந்த சலனமும் ஏற்படுத்தாமல் அமைதியாக இருந்து உன் மகிமையை பரப்பி விடுகின்றாய். 
என்ன உன்னுடைய சூழ்ச்சி!!! இதுதான் உன்னுடைய சாதனையா!!!! உன்னுடைய அழகான பெயரால் நாட்டை ஆண்ட மன்னர்கள் முடி சூடினர். இதே அழகான பெயரால் இன்று மரணத்தைச் சூட்டிக் கொள்கின்றனர். கூடி வாழ்ந்து, கூடி செபித்து, கூடி உண்டு, கூடி மகிழ்ந்த கிறித்தவர்களுக்கே அதிக பாதிப்பை தரக்கூடிய விதமாய் அனுப்பப்பட்டது போல எங்கும் மக்கள் கூடமுடியாத அளவுக்கு தனிமைபடுத்தி விட்டது

வருடத்திற்கு ஒருமுறை மட்டும் வரும் தவக்காலம் பாடுகளின் காலம். எங்களையே உள்நோக்கிப்  பார்க்க, பாவங்களுக்கு பரிகாரம் செய்ய, எங்களையே ஒறுக்க, நெறிபடுத்த, ஆற்றுப்படுத்த தனிமைபடுத்தி அதிகம் செபிக்க கொடுக்கப்பட்ட இக்காலத்தை இந்த ஆண்டு எங்களையே இயேசுவின் பாடுகளோடு இணைத்துகொள்ள எங்களை நீ தனிமைபடுத்தி தியானிக்க வைத்துவிட்டாய்

வேறுபாடு பார்த்தே பழகிவிட்ட எங்களுக்கு வேறுபாடே பார்க்காமல் அனைவரையும் வாட்டுகின்றாய். இயற்கையை அழித்து மனிதத்தை இழந்து வாழ்ந்த நேரங்கள் கடந்து இன்று இயற்கை மட்டும் அமைதியாக மகிழ்ச்சியாக வாழ்கின்ற நேரம் வந்துவிட்டது. விலங்குகளை அடித்து தின்று மகிழ்ந்த எங்களுக்கு விலங்கு போட்டு நான்கு சுவர்களுக்குள் அடைத்துவிட்டாய்

நற்செய்தியில் முதன்மையான கட்டளையாகஉன் கடவுளாகிய ஆண்டவரை உன் முழு இதயத்தோடும், முழு ஆன்மாவோடும், முழு உள்ளத்தோடும் அன்புச் செய்வாயாக: உன் மீது நீ அன்பு காட்டுவது போல உனக்கடுத்தவர் மேலும் அன்பு காட்டுவாயாக” கொடுக்கப்பட்டுள்ளாது. கடவுளன்பு இல்லை பிறன்பும் இல்லை சுயநலம் மட்டும் மேலோங்கி நிற்கிற வேளையில் வந்தது கொரோனா வைரஸ் நம்மை முடி சூட்ட, இறையன்பு பிறரன்பு இல்லாத மாண்புமிகு மனிதர்களாகிய நம்மை தனிமைபடுத்தி வைத்துவிட்டது. அன்புக்கு இலக்கணமாக கூறபடுகின்ற இதயத்திலே நீ கூட புகவில்லை அன்பினால் உன்னை மயக்கி விடுவோமோ என்ற பயத்தினாலோ என்னவோ நேரடியாக நுரையீரலுக்குச் சென்று மூச்சை நிறுத்துகின்றாய்

உன்னுடைய வழிப்பயணத்தை, கைகள், வாய், கண்கள் இவைகளைப் பயன்படுத்தி நுழைந்து விடுகின்றாய். அன்பாக கட்டி அரவணைக்காத இந்த கைகள், அன்பாக இனிய சொற்களை பேசாத இந்த வாய், கனிவான அன்பு நிறைந்த பார்வை பார்க்கத் தெரியாத இந்த கண்கள் இப்படிபட்ட பாவங்களுக்கு பரிகாரம் செய்யவா??? புரியவில்லையே!!!! 

ஒருவரை ஒருவர் நேர்முகமாக பார்த்து, பேசி, சிரித்து எத்தனைனதயோ ஆண்டுகள் கடந்து விட்ட இந்நிலையில் எங்கள் நிலைமையை நீ பயன்படுத்திக் கொண்டாய். நுண்ணிய கிருமியானாலும் எங்களை உனக்கு ஆதாயமாக்கிக் கொண்டாய். குடும்பத்தில், குழுக்களில், ஊரில், நாட்டில், சமூதாயத்தில் உலகில் என்று எத்தனையோ உறவுகளைக் கொண்டு மகிழவேண்டிய சூழ்நிலைகள் வாய்ப்புகள் கொடுக்கப்பட்டும் அதை நாங்கள் பயன்படுத்தாது தொலைக்காட்சி, கணனி, அலைபேசி என்று தனியாக ஓடி ஓடி மகிழ்ந்தோமே. நீயோ இந்த வாய்ப்பை பயனப்டுத்தி எங்களுக்குள் நுழைந்து எங்களை தனிமைப்படுத்தி விட்டாய். கடவுளின் மகன் உயிர்த்தெழுந்ததுப்போல் நாங்களும் மீண்டுமாய் உயிர்த்தெழுந்து இறையன்பு பிறரன்புடன் வாழ வழிகாட்டி விட்டாய். இறைவார்த்தையால் மாற்றமுடியாது போன எங்கள் வாழ்க்கை முறையை நீ வந்து மாற்றி விட்டாய். கடவுளே இல்லை என்று சொன்னவரெல்லாம் இந்த கொரோனா வைரஸை கடவுளால் மட்டும்தான் குணப்படுத்த முடியும்என்று சொல்லும் அளவுக்கு உன்னுடைய தீவிரத்தை காட்டிவிட்டாய்

ஜாதி மத மொழி வேறுபாடின்றி, உலகமெங்கும் எத்தனை மொழிகளில் எத்தனை மதங்களில் எத்தனை விதங்களில் சிறு குழந்தைகள் முதல் முதியோர் வரை உன் பெயரே தெரியாதவர் யாருமிலர்

அத்தனை சக்தியா உனக்கு? இல்லை இல்லை.  எங்கள் பலவீனத்தை நீ பயன்படுத்தி கொண்டாய். மனிதர்கள் பேசிக்கொள்வது “கொரோனா நமக்குள் வந்துவிட்டால் ஒன்று நாம் சாக வேண்டும் அல்லது கோரோனா சாக வேண்டும்.” 

உண்மைதான் செய்தித்தாள்கள் கூறுவது கொரோனாவும் மனிதர்களும் சரிசமமாக இறக்கிறார்கள். மக்களே! தமழ் மக்களே! கொரோனா வருவதற்குமுன் நம்மிடம் உள்ள எதிர்மறை எண்ணங்களாகிய நம்பிக்கையின்மையை, பயத்தை விரட்டி அடிக்க வேண்டும்.

அடுத்து நேர்மறை எண்ணங்களால் நம்மை முழுவதும் நிரப்பி விட்டால் கொரோனா வந்து தங்க இடம் இருக்காது மேலும் நாம் உண்ணும் உணவுகளாகிய மஞ்சள், இஞ்ஜி, பூண்டு, எலுமிச்சை இவைகள் எல்லாம் கொரோனாவுக்கு எதிரிகள். எனவே நம்மை கண்டு அது ஓடிவிடும். நம்மிடம் எதிர்ப்பு சக்தி அதிகம் இருப்பதை உணர்வோம் வாழ்வோம்.


அருள். சகோ. பபியோலா, இத்தாலி.

2 comments:

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD