அன்னையை அறிவோம் - 4 - தூய சிக்யின்குவிராவின் அன்னை

அன்னையை அறிவோம் - 4
திருத்தொண்டர் வில்சன்
தூய சிக்யின்குவிராவின் அன்னை (ஜூலை 09)
கொலம்பிய நாட்டின் பாதுகாவலியான தூய ஜெபமாலை அன்னை அல்லது தூய சிக்யின்குவிரா அன்னையின் பெருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதம் 9ம் தேதி வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது
திருத்தந்தை பிரான்சிஸின் பக்தி 
தூய சிக்யின்குவிராவின் அன்னைக்கு, கொலம்பியா நாட்டின் பாதுகாவலியாக முடிசூட்டுவதற்கு, புனிதத் திருத்தந்தை 10ம் பத்திநாதர் அவர்கள் 1910ம் ஆண்டு, சனவரி 9ம் தேதி அனுமதி வழங்கியிருந்தாலும், அந்நாட்டில் நிலவிய அமைதியற்ற சூழலால் காரணமாக 1919ம் ஆண்டு ஜூலை 9ம் தேதிதான் அன்னைக்கு முடிசூட்டப்பட்டது. இந்நிகழ்வின் முதல் நூற்றாண்டு விழா, இவ்வாண்டு, ஜூலை 9ம் தேதியன்று தூய சிக்யின்குவிரா அன்னையின் பசிலிக்காவில் கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் தன் பிரதிநிதியாகப் பங்கேற்று அன்னையை மகிமைப்படுத்தக் கூடியிருக்கும் மக்களை, தன் சார்பில் ஆசீர்வதிக்க, பிரேசில் நாட்டின் கர்தினால் அஸ்ஸிஸ் அவர்களுக்கு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இலத்தீன் மொழியில், மடல் ஒன்றை, ஜூலை 2ம் தேதி அனுப்பினார். திருத்தந்தையின் வேண்டுகோலுக்கு இணங்கி திருத்தந்தையின் பிரதிநிதியாக கர்தினால் அஸ்ஸிஸ் அவர்கள் இவ்விழாவில் பங்கேற்று அன்னையின் ஆசீரை பெற்றுத்தந்தார். 2017 செப்படம்பர் 7ம் தேதி கொலம்பியா சென்ற நம் திருத்தந்தை அன்னையின் திருப்படம் முன்பு வெகுநேரம் செபித்தார். மேலும் பயணத்திற்கு துணையாயிருக்க அன்னையின் திருப்படத்தையும் பெற்றுச்சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

தூய சிக்யின்குவிராவின் அன்னையின் ஓவியம்
1560 ஆம் ஆண்டில் அலோன்சோ டி நார்வீஸ் என்ற ஸ்பானிஷ் ஓவியர், இந்தியர்களால் சுத்தமான பருத்தியினால் நெய்யப்பட்ட துணியில் ஜெபமாலை அன்னையின் உருவப்படத்தை மண்ணிலிருந்து எடுக்கப்பட்ட கனிம மற்றும் கரிம நிறமிகளைப் பயன்படுத்தியும் இப்பகுதியில் கிடைத்த மூலிகை மற்றும் மலர்களிலிருந்து எடுக்கப்பட்ட சாறுகளைப் பயன்படுத்தியும் வரைந்தார்
ஓவியத்தின் மையத்தில் சுமார் மூன்று அடி உயரம் கொண்ட ஜெபமாலை அன்னை மென்மையான புன்னகையுடன் தன் கைகளில் இருக்கும் குழந்தையை கவனிப்பது போல இடது பக்கம் பார்க்கிறார். அன்னையின் முகமும்; குழந்தை இயேசுவின் முகமும் பிராகசமாய் ஒளிற்கிறது. குழந்தையின் கட்டைவிரலில் ஒரு சிறிய அழகிய வண்ண பறவை உள்ளது. அவரது இடது கையில் ஜெபமாலை தொங்குகிறது. திருவெளிப்பாட்டு நூலில் கூறப்படுவது போல, பிறை நிலாவின் மீது ஒரு வெள்ளை முக்காடு தன் தலைமுடியை மறைக்கின்ற வகையில் அன்னை நிற்க்கின்றார். அவருடைய ரோஜா நிற ஆடை ஒரு நீல நிற துணியால் மூடப்பட்டுள்ளது. இடது கையின் சிறிய விரலில் ஒரு ஜெபமாலையையும் வலது கையில் செங்கோலையும் வைத்திருக்கிறார். அவரது வலதுபுறத்தில் பதுவை நகர புனித அந்தோனியாரின் உருவமும், இடதுபுறத்தில் திருத்தூதர் புனித அந்திரேயாவின் உருவமும் வரையப்பட்டிருக்கிறது.
அன்னையின் முதல் பிரசன்னம்
1562 ஆம் ஆண்டில் இத்திருப்படம் ஒரு தேவாலயத்தில் மக்கள் வணக்கம் செலுத்த வைக்கப்பட்டது. அந்த ஆலயத்தின் மேற் கூரையில் கசிந்த நீரும், ஈரப்பதமும், காற்றும் காலப்போக்கில் ஓவியத்தை அடையாளம் காண முடியாத வகையில் சேதப்படுத்தியது. 1577 ஆம் ஆண்டில் சேதமடைந்த ஓவியம் சிக்வின்குவேராவுக்கு மாற்றப்பட்டடு பழைய பொருட்கள் வைக்கப்படும் ஒரு அறையில் தூக்கி எறியப்பட்டது. எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஸ்பெயினில் உள்ள செவில்லியைச் சேர்ந்த மரியா ராமோஸ் என்ற பக்தியுள்ள பெண்மணி, ஆலயத்தை சுத்தம் செய்து புதுப்பித்து, அதில் அன்னையின் உருவத்தைப் பெற்றிருந்த மங்கலான அந்த துணியை வைத்தார். 1586, டிசம்பர் 26, வெள்ளிக்கிழமை அன்று அதிசயமான முறையில் துணியில் உள்ள கீறல்கள் மற்றும் துளைகள் படிப்படியாக மறைந்து, பழைய வண்ணங்களைப்பெற்று பிரகாசமாய் ஒளிவீசி மீண்டும் தனித்து நின்றது அன்னையின் திருப்படம்.

வெனிசுலாவின் மராக்காய்போவில் உள்ள பசிலிக்காவில் அன்னை மரியாவின் ஓவியம்
1709 () 1749ம் ஆண்டு நவம்பர் மாதம் ஒரு நாள், பெண் ஒருத்தி, மராக்காய்போ ஏரியின் கரையோரத்தில் துணி துவைத்துக்கொண்டிருக்கும் போது ஒரு சிறிய மரப்பலகை தன்னை நோக்கிவாறு மிதப்பதைக் கண்டார். அது என்ன என்று தெரியாமல் எதற்காவது பயன்படும் என்று நினைத்து அதை அவளுடைய வீட்டிற்கு எடுத்துச் சென்றாள். மறுநாள் காலையில், யாரோ தன்னை அழைப்பது போல, வீட்டின் கதவைத் தட்டுவதை கேட்டாள். யார் என்று பார்க்க சமையலரையிலிருந்து வெளியே வந்த போது, அந்த மரத்துண்டு பிரகாசிப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டாள், அந்த பலகையிலிருந்தது தூய சிக்வின்குவேரா அன்னையின் உருவம். அதை தனது வீட்டின் சுவரில் தொங்கவிட்டார்;. பின்னர், நவம்பர் 18 திங்கள் அன்று, மீண்டும் அவள் வீட்டினுள் இருந்து யாரோ தட்டுவது போலவும் பல விசித்திரமான சத்தங்களும் கேட்டது, திகைப்பூட்டும் வகையில் மரத்துண்டு பிரகாசமாகவும், வானவில் போல பிரகாசித்த விளக்குகளாலும் ஒளிர்ந்தது. ஆச்சரியப்பட்டு, உணர்ச்சியால் நிரம்பிய அவள் வீட்டை விட்டு வெளியே ஓடி, “மிலாக்ரோ! மிலாக்ரோ!” (ஸ்பானிஷ் மொழியில் அதிசயம் என்று பொருள்) என்று கத்தினார். அந்த அதிசயத்தைக் காண பலர் வந்து வியந்து நின்றனர். அவர்கள் அதை மராக்காய்போவின் ஆலயத்தில் மக்கள் செபிக்க வைத்தனர்.
தூய சிக்யின்குவிரா அன்னையின் உருவத்துடன் கூடிய மரம் தலைநகரான கராகஸக்கு சொந்தமானது என்று அரசாங்கம் முடிவு செய்ததாக ஒரு வரலாறு கூறுகிறது. எனவே அவர்கள் அதை அங்கிருந்து கொண்டுவர உத்தரவிட்டனர். இந்த உத்தரவைப் பின்பற்றிய வீரர்கள் படத்தை மராக்காய்போவிலிருந்து எடுத்துச் சென்றபோது, அது கனமாகவும் நகர்த்த கடினமாகவும் இருந்தது, இறுதியாக யாரும் அதைத் தூக்க முடியாது என்று மீண்டும் அவர்கள் அதை மராக்காய்போவின் பசிலிக்காவிற்கு திருப்பி அனுப்பினர்.
திருத்தல வளர்ச்சி 
1858ல் கவர்னர் பிரான்சிஸ்கோ டி லா ரோச் ஃபெரரின் ஆட்சியின் கீழ், புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட அன்னையின் உருவத்தை வணங்குவதற்காக ஒரு பெரிய தேவாலயம் அமைக்கப்பட்டது. சிக்வின்குவிராவின் அன்னை என்ற பெயரும் சூட்டப்பட்டது. அன்னையின் சுருப அழகை பெரிதாக்க 18 காரட் தங்க வேலைப்பாடுகளால் அலங்கரிக்கப்பட்டது. கிரீடம் மட்டும் 10 கிலோகிராம் எடையுடன் 18 காரட் தங்கத்தாலும் பல விலைமதிப்பற்ற கற்களாலும் செய்யப்பட்டது
1986 ஜூலை 3ம் தேதி கொலம்பியா சென்ற திருத்தந்தை புனித இரண்டாம் ஜான் பால் அன்னையின் திருப்படம்; முன்பு கொலம்பிய நாட்டின் அமைதிக்காக செபித்தார்.
2004 ஆம் ஆண்டில், உள்ளூர் அரசாங்கம்சிக்யின்குவிராவின் ஜெபமாலை சதுக்கத்தைதிறந்து வைத்தது. மராக்காய்போ மக்கள் நவம்பர் மாதம் சினிடாவின் கண்காட்சியை இரவு முழுவதும் விருந்துடன் கொண்டாடுகிறார்கள். அக்டோபர் 27 ஆம் தேதி சினிடாவின் கண்காட்சி அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி கிறித்துமஸ் பெருவிழாவோடு முடிக்கு வருகிறது. இக்காலங்களில் பலிபீடத்திலிருந்து கன்னி மரியின் திருச்சுருபம் கீழே இறக்கப்பட்டு மக்களின் வணக்கத்திற்கு வைக்கப்படுகிறது.
திருஅவையின் ஒப்புதல்கள்
திருத்தந்தை ஏழாம் பத்திநாதர் 1829 ஆம் ஆண்டில் கொலம்பியாவின் பாதுகாவலராக அறிவித்து முறையான வழிபாட்டு முறைக்கு அனுமதி வழங்கினார்.
திருத்தந்தை பத்தாம் பத்திநாதர் இத்திருப்படத்திற்கு 9 ஜனவரி 1910 இல் ஒரு நியமன முடிசூட்டு விழாவுக்கு அனுமதி வழங்கினார்.
முதல் உலகப் போர் மற்றும் உள் நாட்டு அரசியல் சூழ்நிலை காரணமாக திருத்தந்தை பதினைந்தாம் ஆசிர்வாதப்பர் 1919 ஜூலை 9 அன்று இந்த ஆணையை நிறைவேற்றினார்.

திருத்தந்தை பதினொன்றாம் பத்திநாதர் 1927ல் இத்திருத்தலத்தை ஒரு சிறிய பசிலிக்காவாக உயர்த்தினார்.

No comments:

Post a Comment

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD