இயேசுவின் உவமைகளும் உதாரணங்களும் - 5

இயேசுவின் உவமைகளும் உதாரணங்களும்  - 5
பா.கா. அலெக்ஸ் சகாயரஜ்
- - - - - - - - 
நற்செய்திப் பகுதி: மாற்கு 4: 21  (லூக் 8:16-18)
சூழ்நிலை:
செய்கின்ற ஒவ்வொரு செயலும் பலன் தரக்கூடியதாகவும், பிறருக்கு நலம் பயக்க கூடியயதாகவும் இறைவார்த்தையை  கேட்கிறவர்களாக மட்டுமே இல்லாமல் அதை செயல்படுத்தும் செயல்வீரர்களாக மாறாமல் இருந்த சீடர்களுக்கும் உடனிருந்த மக்களுக்கும் விளக்கு உவமையின் மூலமாக உணர்த்தும் இயேசு….
உதாரணம்: விளக்கைக் கொண்டு வருவது எதற்காக?”
-----------------------------------------

மாற்கு நற்செய்தியில்; இம்மாதம் நமக்கு இயேசு கொடுக்கின்ற உதாரணப் பொருள்விளக்கு’. கடவுளால் முதல் முதலாக உண்டாக்கப்பட்டது ஒளி(தொநூ1:3). அந்த ஒளியைத் தாங்கியிருக்கிற விளக்கினை வைத்து அங்கு கூடியிருப்பவர்களுக்கு மனித வாழ்க்கை எத்தகையதாக இருக்க வேண்டுமென்பதை விளக்குகிறார்
விளக்கின் பயன்கள் இரண்டு
.) இருளை விளக்கி ஒளியைத் தருகிறது. .) இருக்கின்றவற்றை இருக்கின்றதாகவே காண்பிக்கிறது(உண்மையை எண்பிக்கிறது). 

இஸ்ரயேல் மக்கள் வரலாற்றிலும் சரி, இயேசுவின் காலத்திலும் சரி விளக்கானது அவர்களுடைய வாழ்வின் சரிநிகர் பகுதியாக அமைந்திருக்கிறது. கடவுளின் பிரசன்னம் என்றாலும் சரி (வி. 25:3 மெனோரா), திருமண நிகழ்வுகளானாலும் சரி (மத் 25:01), தினசரி வாழ்க்கையானாலும் சரி (லூக்15:09) விளக்கு அவர்களுடைய வாழ்வின் அங்கமாயுள்ளது. அம்மக்களுக்கு மிகவும் பரிட்சையமான பொருளை உதாரணப்படுத்தி இயேசு தன் செய்தியை பகிர்கிறார். இந்த விளக்கு வாழ்வையும், வளத்தையும், வழிகாட்டுதலையும் பொதுவாக  உருவகபடுத்தப்படுவதாக நம்பப்படுகிறது
கடவுள் நமக்கு விடுக்கும் செய்தி: திருவருட்சாதனங்களால் நமக்கு அருளப்பட்டுள்ள தூய ஆவியின் அருளும், கொடைகளையும் நாம் மற்றவர்களுக்காக பயன்படுத்தவேண்டும், மரக்காலி; உள்ளேயோ அல்லது கட்டிலுக்கடியில் வைக்கப்படும் விளக்கு எவ்வாறு பயனற்றதோ, அதுபோலவே பிறருக்கு உதவாத நாமும், கடவுளிடமிருந்து நாம் பெறும் கொடையும், அருளும் நம் வாழ்க்கையும் பயனற்றதாய் போய்விடுகிறது.  
கடவுளின் அருளையும், கொடையையும் பெற்ற நம்மில் பலபேர் மரக்காலுக்குள்ளும், கட்டிலுக்கடியிலும் வைக்கபட்ட விளக்கைப்போல அந்த அருளை தங்களிலேயும், பிறரிலும் உணராதவர்களாய் இருக்கிறோம்.
திருவருட்சாதனங்கள் மூலமாக கடவுளின் அருளால், எரிகின்ற விளக்காய் நம் வாழ்வை ஒளிர்வித்தவர்களாகவும், பிறர் வாழ்க்கையை நம் நற்செயல்களால் ஒளிர்விக்கிறவர்களாகவும் மாற இந்த விளக்கு உதாரணம் நம்மை அழைக்கின்றது. வாருங்கள் இயேசுவால் ஒளிர்வோம்! இயேசுவாய் ஒளிர்விப்போம்

கேள்விதன் வாழ்க்கையை தியாகமாக்கி நம் வாழ்க்கையை உயர்த்தும் விளக்கைப்போல என் வாழ்க்கையை தியாகப்படுத்தி பிறர் வாழ்க்கைக்கு உதவுவேனா

கட்டுரையாளர்



No comments:

Post a Comment

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD