அன்னையை அறிவோம் - 5 - உத்தரிய மாதா (கார்மேல் அன்னை)

அன்னையை அறிவோம் - 5 
 உத்தரிய மாதா (கார்மேல் அன்னை) ஜூலை 16

திருத்தொண்டர் வில்சன்



உத்தரிய மாதா வரலாறு 
புனித உத்தரிய மாதா அல்லது தூய கார்மேல் அன்னை என்பது கார்மேல் சபையின் பாதுகாவலியாகிய, அன்னை மரியாவுக்கு அளிக்கப்படும் சிறப்புப் பெயர்களல் ஒன்றாகும்;. கார்மேல் சபையின் முதல் உறுப்பினர்கள் 12 முதல் 13ம் நூற்றாண்டு வரை கார்மேல் மலையில் வனவாசிகளாக கடும் தபம், ஜெபம், ஒருத்தல் முயற்சிகளை செய்து உலக வாழ்விலிருந்து தங்களை முற்றிலும் தனிமைப்படுத்தி வாழ்ந்தனர். தங்களின் துறவற மடத்தின் அருகில் கடவுளுக்கு ஓர் அழகிய ஆலயத்தை அன்னை மரியாளின் பெயரில் கட்டினர். அக்கால வழக்கப்படி அக்கோவில் இருந்த இடத்தின் பெயராலேயே மரியாவுக்கு கார்மேல் அன்னை என்னும் பெயர் வழங்கலாயிற்று
வரலாற்றுப் பின்னனி 

வரலாற்றுப் பின்னனி 
பாலஸ்தீன நாட்டின் மேற்குப் பகுதியில் உள்ள மத்தியத் தரைக்கடலுக்கு அருகே உள்ள மலைதான் கார்மேல் மலையாகும். 1 அரசர்கள் 18ம் அதிகாரத்தில் எலியா இறைவாக்கினர் போலி இறைவாக்கினர்கள் 150 பேரை வெற்றிகொண்ட  கார்மேல் மலையில், அவருடைய சீடர்கள் தொடர்ந்து வாழ்ந்து வந்தார்கள். பின்னர் திருஅவையில் சிலுவைப்போர் நடைபெற்ற போது புனித பூமிக்கு சென்ற ஒரு சில துறவிகள் எலியாவின் வழியைப் பின்பற்றி வாழ இந்த மலையில் தங்கினர். இவர்களே கார்மெல் மலைத் தூய துறவிகள் என அழைக்கப்பட்டனர். இவர்கள் 1245 ஆம் ஆண்டு, அங்கு ஏற்பட்ட முகமதியர்களின் படையெடுப்புக்குப் பின் இங்கிலாந்துக்கு மாறிப்போனார்கள்.

புனித சைமன் ஸ்டாக்
முகமதியர்களின் படையெடுப்புக்குப் பின்னால் இங்கிலாந்தில் குடிபெயர்ந்த கார்மேல் சபையில் புனித சைமன் ஸ்டாக் என்பவர் தனது நாற்பதாவது வயதில் இணைந்தார். இஸ்ரயேலில் இருக்கும் கர்மேல் சபைக்கு அனுப்பப்பட்ட அவர், கலகக்காரர்கள் அந்த இடங்களை ஆக்கிரமிக்கும் வரை அங்கிருந்து தன் செப தப ஒறுத்தல் முயற்சிகளில் ஈடுபட்டார்.அதன் பின், தனது சபைச் சகோதரர்களுடன் இங்கிலாந்து திரும்பிய அவர் , ஏகமனதாக கிபி 1245 ஆம் ஆண்டில் சபைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மாதாவின் பேரில் மிகுந்த பற்றுதல் கொண்டிருந்தார். இதுவே கார்மேல் சபை இவரது தலைமையின் கீழ் தழைத்தோங்கக் காரணமாய் அமைந்தது. இன்று ஏறத்தாழ 768 ஆண்டுகளுக்கு முன்னர், 1251ம் ஆண்டில் கார்மேல் துறவு சபை பல்வேறு இடையூறுகளுக்கு உள்ளானது. அச்சமயத்தில் சைமன், தனது சபைக்கு ஏதாவது ஒரு தனிப்பட்ட ஆசிர்வாதத்தை வழங்குமாறு அன்னைமரியிடம் உருக்கமாகச் செபித்து வந்தார்.

உத்தரியம் 
இந்த நல்ல துறவியின் செபத்தைக் கேட்ட அன்னைமரியா, 1251ம் ஆண்டு ஜூலை 16ம் தேதி கேம்பிரிட்ஜில் ஒரு பழுப்பு நிற உத்தரியத்தை கையில் ஏந்தியவண்ணம் அவருக்குக் காட்சி கொடுத்துச் சொன்னார்

எனது அருமை மகனே, இந்த உத்தரியம் உங்கள் சபைக்குரியது. இது நான் உங்களுக்கு வழங்கும் சிறப்புச் ஆசிர்வாதத்தின் அடையாளம். இது உனக்காவும், உனது கார்மேல் மலைச் சிறாருக்காகவும் நான் பெற்றது. இதை அணிந்துகொண்டு இறப்பவர்கள் நித்திய நெருப்பிலிருந்து காப்பாற்றப்படுவார்கள், இது மீட்பின் சிறப்பு அடையாளம், ஆபத்தில் காக்கும் கேடயம், அமைதி மற்றும் பாதுகாப்புக்கென சிறப்பாக வழங்கப்படும் உறுதிஎன்று. கழுத்தில் அணியும் இந்த உத்தரியத்தை அன்னை மரியாவிடமிருந்து பெற்றார் புனித சைமன் ஸ்டாக். அதன்பிறகு சைமன் ஸ்டோக் என்ற அந்த கார்மேல் சபைத் துறவி, உத்தரியம் அறிந்துகொள்கிற வழக்கத்தை சபைத் துறவிகளிடத்தில் கொண்டுவந்தார், அது இன்றைக்கு படிப்படியாக வளர்ந்து, பொதுமக்களும் அணிந்துகொள்ளும் அளவுக்கு வந்துவிட்டது

Stock என்றால் அடிமரம் என்று பொருள். இவர் தனது 12வது வயதிலிருந்தே ஓர் ஓக் மரத்தின் அடிப்பாகத்தில் இருந்த காலியான இடத்தில் துறவியாக வாழ்ந்தார் எனச் சொல்லப்படுகிறது. இவர் இளைஞனாக இருந்தபோது புனித பூமிக்குத் திருப்பயணம் மேற்கொண்டார். அங்கு கார்மேல் சபைத் துறவிகளுடன் சேர்ந்தார். பின்னர் ஐரோப்பா திரும்பி, கார்மேல் சபையின் பல இல்லங்களை நிறுவினார். குறிப்பாக, கேம்பிரிட்ஜ், ஆக்ஸஃபோர்டு, பாரிஸ், பொலோஞ்ஞா போன்ற பல்கலைக்கழக நகரங்களில் கார்மேல் சபை இல்லங்களை ஏற்படுத்தினார். கார்மேல் சபையை ஜெப, தப வாழ்வோடு சேர்த்து தர்மம்(பிச்சை) எடுத்து வாழும் சபையாக மாற்றினார்.

அற்புதங்கள்
இத்தாலியிலுள்ள பால்மியில், ஆண்டுதோறும் நவம்பர் 16 அன்று, 1894ம் ஆண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தின் ஆண்டுவிழா அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கம் நகரின் மையப்பகுதியில் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்திற்கு 17 நாட்களுக்கு முன்பு, விசுவாசிகளில் பலர் கார்மேல் அன்னையின் திருச்சுருபத்தில் விசித்திரமான கண் அசைவுகளையும், முகத்தின் நிறத்தில் ஏற்பட்ட மாற்றங்களையும் பார்த்தனர். இது உள்ளூர் மற்றும் தேசிய பத்திரிகைகளில் வெளிவந்தன. நவம்பர் 16 மாலை, விசுவாசிகள் கார்மலின் அன்னையின் திருச்சுருபத்தை தங்கள் தோள்களில் சுமந்து தெருக்களில் ஊர்வலமாய் சென்றனர். ஊர்வலம் நகரத்தின் முடிவை எட்டியபோது, நிலநடுக்கம் பால்மி மாவட்டம் முழுவதையும் உலுக்கியது, நகர் மிகப் பெரிய அழிவை சந்தித்தது. ஆனால், சுமார் 15,000 மக்கள் தொகையில் ஒன்பது பேர் மட்டுமே இதில் இறந்தனர், ஏனெனில் கிட்டத்தட்ட அனைத்து மக்களும் ஊர்வலத்தைக் காண தெருவில் இருந்ததால் கட்டிடங்களுக்குள் யாரும் சிக்கவில்லை. எனவே, ஒவ்வொரு ஆண்டும் 1894 ஊர்வலத்தை நினைவுகூர்கிறது, கத்தோலிக்க திருஅவை இந்த அதிசயத்தை அதிகாரப்பூர்வமாக அங்கீகரித்துள்ளது

இதைப்போல என்னற்ற அதிசயங்கள் அற்புதங்கள் தூய கார்மேல் அன்னையின் அருட்த்தில், அன்னையின் பரிந்துரையால் நிகழ்ந்துள்ளது. செங்கல்பட்டு மறைமாவட்டத்தலுள்ள கோவளம் கர்மேல் அன்னை ஆலயம் கட்டப்பட்ட வரலாறும்டி-மான்டேஎன்ன ஆங்கிலேயரின் வாழ்வில் நடைபெற்ற அற்புதத்தினால் தான்.

கார்மேல் அன்னை: காட்சி சொல்லம் செய்தி
கார்மேல் அன்னை துறவி சைமன் ஸ்டோக்-யிடம் காட்சியின்போது சொன்னது, “உத்தரிக்கத்தை யாராரெல்லாம் அணிந்திருக்கிறார்களே, அவர்கள் நரக தண்டனையிலிருந்து காப்பாற்றப் படுவார்கள்என்பதுதான். நாம் உத்தரிக்கத்தை அணியும்போது அன்னையின் பாதுகாவலைப் பெறுகிறோம்அதே நேரத்தில் நாம் அந்த அன்னை வாழ்ந்து காட்டிய நெறியின் படி வாழ அழைக்கப்டுகின்றோம்.

மரியன்னை கிறிஸ்தவ வாழ்விற்கு முன்மாதிரி. அவள் தாழ்ச்சிக்கு, பிறரன்புக்கு, கீழ்படிதலுக்கு எடுத்துக்காட்டாக  தலைசிறந்த உதாரணமாக விளங்குகின்றார். ஆகவே, நாம் அன்னையைப் போன்று தாழ்ச்சியில், பிறரன்பில், கீழ்ப்படிதலில் வளரும்போது  அன்னையின் அன்புப் பிள்ளைகள் ஆகின்றோம், அதே நேரத்தில் அவளது பாதுகாவளைப் பெறுகின்றவர்கள் ஆகின்றோம். எனவே, அன்னையின் வழி நடக்க முயற்சிப்போம், அன்னையின் பாதுகாப்பையும் அரவணைப்பையும் நிறைவாய் பெறுவோம்.


No comments:

Post a Comment

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD