அன்னையை அறிவோம் - 3 - தூய சலேத் அன்னை

                   அன்னையை அறிவோம் -3          
திருதொண்டர் வில்சன்
   தூய சலேத் அன்னை
காலச் சூழல்
பிரான்ஸ் நாட்டின் ஆல்ப்ஸ் மலைத்தொடரில் உள்ள குக்கிராமம் லா-சலேத். பிரான்ஸில் உள்ள திருஅவைக்கு பெரும் அச்சுறுத்தலாய் விளங்கிய பிரெஞ்சு புரட்ச்சியின் முடிவுகள், மாவீரன் நெப்போலியனின் ஆட்சியில் சிந்தப்பட்ட இரத்தம், மக்களின் எண்ணங்களில் அதிகரித்து வந்த மதசார்பின்மை சிந்தனைகள்ஐரோப்பிய கண்டத்தில் உள்ள நாடுகளுக்கிடையே இருந்த அரசியல் மற்றும் எல்லைப் பிரச்சனைகள் மக்களின் விசுவாசத்தை கடவுள் நம்பிக்கையை கடுமையாய் பாதித்த காலம் அது. வெகு சிலரே லா-சலேத்திலுள்ள தேவாலயத்திற்கு திருப்பலிக்கு வந்தனர். பல ஞாயிறு திருப்பலிகள் வெறிச்சோடி காணப்பட்டன. கத்தோலிக்க சடங்கு முறைகள் மக்களால் முற்றிலும் புறக்கணிக்கப்ட்டன. செபிப்பதை விட பிறரை சபிப்பதில் மக்கள் அதிகம் ஆர்வம் காட்டினர்.
சலேத் அன்னையின் திருக்காட்சி
1846 செப்படம்பர் மாதம் 19ம் தேதி சனிக்கிழமையன்று மாக்ஸிமின் குய்ராட்(11 வயது) மற்றும் மெலனி கால்வாட் (14வயது) என்ற இரு சிறார்கள் தங்கள் முதலாளியின் ஆடுகளை இந்த மலைத் தொடரில் மேய்த்து வந்தர்கள். அவர்கள் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தபோது, சூரியனை விட பிரகாசமான ஒரு ஒளியைக் கண்டார்கள். அந்த ஒளியின் அருகே சென்று பார்த்த போது, ஒரு அழகான பெண்மணி ஒரு பாறையின் மீது அமர்ந்து கைகளின் மீது முகத்தினைப் புதைத்து அழுது கொண்டிருப்பதை அவர்கள் கவனித்தனர். கண்ணீருடன், அந்த பெண் அவர்கள் முன் நின்று அவர்களின் தாய் மொழியான பிரெஞ்சு மொழியில் பேசினார். அவருடைய ஆடை ஒளிமயமாய் இருந்தது. ரோஜா மலர்களாலான கிரீடத்தை அணிந்திருந்தார். ஆடையின் விளிம்பிலும் அணிந்திருந்த செருப்பிலும் ரோஜா மலர்கள்; காணப்பட்டது. அவருடைய கழுத்தில் ஒரு தங்க சிலுவை காணப்பட்டது. அச்சிலுவையின் ஒருமுனையில் சுத்தியும் ஆணிகளும் இருந்தன. மறுபுறம் ஆணிகளை பிடுங்கி எடுக்க பயன்படுத்தும் இடுக்கியும் இருந்தன. அவர் தோள்களின் மேல் ஒரு கனமான சங்கிலி இருந்தது.

http://www.divinemysteries.info/our-lady-of-la-salette-france-1846/
அவர், “என் பிள்ளைகளே, என்னிடம் வாருங்கள். பயப்பட வேண்டாம். மிக முக்கியமான ஒரு செய்தியைச் சொல்ல நான் இங்கு வந்துள்ளேன். என் மக்கள் கீழ்ப்படியவில்லையென்றால், என் மகனின் கைகளைத் தளர்த்த சொல்லுவேன். உங்கள் பாவங்கள் மிகவும் கனமானது, இனியும் தாங்க முடியாத அழுத்தத்தை அது என் மகனின் கைகளில் ஏற்படுத்துகிறது. இன்னும் எவ்வளவு காலம் நான் உங்களுக்காக துன்புறுவது. என் மகனின் கைகளிலிருந்து நீங்கள் தூக்கி எறியப்படாதவாரு உங்களுக்காக இடைவிடாமல் நான் இங்கு ஜெபித்துக்கொண்டு உங்களுக்காக பரிந்து பேசிக்கொண்டு இருக்கின்றேன். ஆனால் நீங்களோ அதை குறைந்த பட்சம் கவனிப்பது கூட இல்லை. உலகப்படியான வாழ்க்கையைத்தான் வாழ விரும்புகின்றீர்கள். மனம் மாற துளியும் விரும்புவதில்லை. எதிர்காலத்தில் நீங்கள் எவ்வளவு நன்றாக ஜெபித்தாலும், நீங்கள் எவ்வளவு சிறப்பாக செயல்பட்டாலும், உங்களுக்காக இவ்வளவு நாட்கள் நான் சகித்ததை இனியும் என்னால்  ஒரு போதும் செய்ய முடியாது.
வாரத்தின் ஆறு நாட்கள் நீங்கள் உங்கள் வேலைக்கு செல்ல, பணம் சம்பாரிக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள் ஆனால் ஏழாவது நாள் ஞாயிற்றுக் கிழமை என்னுடையது. அதை யாரும் எனக்குக் கொடுப்பது இல்லை. கோடைக்காலத்தில் ஒரு சில வயதான பெண்கள் மட்டுமே திருப்பலிக்கு செல்கிறார்கள். மற்றவர்கள் எல்லாம் ஞாயிற்றுக்கிழமை முழுவதும் வேலை செய்கின்றனர். குளிர்காலத்தில், என்ன செய்வது என்று தெரியாதபோது, வேடிக்கை பார்ப்பதற்காக பொழுது போக்கிற்காக மட்டுமே சிலர் திருப்பலிக்கு செல்கிறார்கள். நோன்பு நாட்களில் கூட அவர்கள் நாய்களைப் போல கசாப்புக்கடைகளுக்குச் செல்கிறார்கள்.
கடந்த ஆண்டு அறுவடையின் போது உருளைக்கிழங்குகளை அழுகச் செய்து உங்களை எச்சரித்தேன். நீங்கள் செவிசாய்க்கவில்லை. இனி தானியங்களை விதைப்பதில் எந்த நன்மையும் உங்களுக்கு ஏற்படாது, ஏனென்றால் நீங்கள் விதைத்தவைகளை மிருகங்களை விழுங்கிவிடும். திராட்சைகள் அழுகிப் போகும், பருப்புகள் கெட்டுவிடும். இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் பெருவிழாவின் போது எதுவும் மிச்சமிருக்காது. ஒரு பெரிய பஞ்சம் வருகிறது. ஆனால் அது வருவதற்கு முன்பு, ஏழு வயதுக்குட்பட்ட குழந்தைகள் பயத்தால் ஆட்கொள்ளப்பட்டு பெற்றோரின் கைகளிலேயே இறந்து போவார்கள். மற்றவர்கள்; தங்கள்செய்த பாவங்களுக்கு பரிகாரமாக பட்டினியில் மடிவார்கள். ஒருவேளை இப்பொழுதே இம்மக்கள் மனமாற்றம் அடைந்தால் பாறைகள் கோதுமைக் குவியல்களாக மாறும்,நன்மைகளால் நான் உங்களை நிறப்புவேனஎன்று கூறினார்.
பின்னர் அவர் குழந்தைகளிடம், “என்பிள்ளைகளே, நீங்கள் தினமும் ஜெபங்களை நன்றாகச் சொல்கிறீர்களா?” என்று கேட்டார். அவர்களோசொல்லுவது இல்லைஎன்று முணுமுணுத்தனர். பின் அன்னை அவர்களிடம்என் பிள்ளைகளே, காலையிலும் இரவிலும் ஜெபம் சொல்வது மிகவும் முக்கியம். உங்களுக்கு நேரம் இல்லாதபோது, குறைந்தபட்சம் கர்த்தர் கற்பித்த செபமும் மங்கள வார்த்தை செபமுமாவது சொல்லுங்கள்.” என்றார். பின்னர்பிள்ளைகளே, இதை என் மக்கள் அனைவருக்கும் தெரியப்படுத்துங்கள்என்று கூறி அவர்களை விட்டு விலகி, செங்குத்தான பாதையில் சென்று, பிரகாசமான வெளிச்சத்தில் மறைந்து போனார்.
குழந்தைகள் இருவரும் தங்களோடு வேலை செய்கின்றவர்களிடம் நடந்ததை சொன்னார்கள். இச்செய்தி காட்டுத் தீ போல பரவ, குழந்தைகள் லா-சலேத்தின் பங்குத்தந்தையிடம் அனுப்பப்பட்டனர். பங்குதத்தந்தை திருப்பலியில் குழந்தைகள் கண்ட காட்சியை விவரித்தார். அரசாங்க அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கினர், ஒருமுறை அன்னை காட்சி கொடுத்த அந்த இடத்தை ஆய்வு செய்யும்போது, அன்னை அமர்ந்திருந்த பாறையின் ஒரு பகுதியை யாரோ உடைக்க, வறண்ட அந்த இடத்திலஒரு நீரூற்று தோன்றியது. நீண்டகாலமாக கடுமையான நோயால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணுக்கு அந்த நீருற்றிலிருந்து சிறிது தண்ணீர் கொடுக்கப்பட்டது. அவள் ஒவ்வொரு நாளும் அன்னைக்கு பிரார்த்தனைசெய்து கொஞ்சம் தண்ணீர் குடித்தபோது ஒன்பதாம் நாளில் அவள் பூரண குணமடைந்தாள்.
அதன் பின் மக்கள் அனைவரும் மிகுந்த பக்தியோடு திருப்பலியில்  கலந்துகொள்ளத் துவங்கினர், தவறாமல் ஒப்புரவு அருட்சாதனத்திலும் பங்கேற்றனர். ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்வதை நிறுத்திவிட்டனர். ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, செப்டம்பர் 19, 1851அன்று, ஆயர் ப்ரூலார்ட் அனைத்து அடையாளங்களையும் ஆய்வு செய்து அன்னையின் காட்சி சந்தேகத்திற்கு இடமில்லாதது அது உறுதியானது என்று அறிவித்தார்.

இன்று நமக்கு சொல்லும் செய்தி
அன்னை அன்று காட்சியளித்த அதே கால சூழல்தான் இன்றும் நம்மிடையே நிலவுகிறது. அன்னையின் செய்தி இப்போதும் மிகப்பொருத்தமாக இருக்கிறது. இறைவனின் பெயரை எத்தனை பேர் அவதூறாகப் பயன்படுத்துகின்றோம்? ஒவ்வொரு நாளும் எத்தனை பேர் ஜெபிக்கத் தவறுகின்றோம்? தவறான படங்களை பார்த்து எத்தனை பேர் மகிழ்கின்றோம்? நம்மில் எத்தனைப்பேர் ஞாயிறு திருப்பலியை பக்தியுடன் முழுமையாகக் காண்கின்றோம்? ஞாயிற்றுக்கிழமை என்றாலே நம்மில் பலருக்கு டி.வி பார்பதற்கும். விளையாடுதற்குமான நாளாக மாறிவிட்டது. மறைக்கல்வி வகுப்பிற்கு பிள்ளைகளை அனுப்பாமல் நிறைய மதிப்பெண்கள் எடுக்க டியூசன்களுக்கும் பிற வகுப்புகளுக்கும் அனுப்புகின்ற பெற்றோர்களேஇதே செய்தியை இன்று உங்களுக்கும் சலேத் அன்னை தருகின்றார்.
தமிழகத்தில்
தமிழகத்தில் கொடைக்கானலில் லா-சலேத் அன்னைக்கு அழகிய ஆலயம் 1883ம் ஆண்டு செயின்ட்சீர் அடிகளாரால் கட்டப்பட்து. மிகச் சிறந்த சுற்றலாத்தலமாகவும் ஜாதி மத இன மொழி வேறுபாடுகளைக் கடந்து பல மக்கள் வந்து இறைவனின் அருளையும் அன்னையின் அன்பையும் சுவைக்கும் அற்புதத்தளமாகவும் இந்த ஆலயம் விளங்குகிறது. ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு மாதம் 15ம் தேதி சலேத் அன்னையின் பெருவிழா இங்கு வெகு விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது.
ஜெபம்
தூய சலேத் அன்னையே, எங்களைத் தேற்றுகின்ற நிறையன்பின் தாயே! கல்வாரியில் நீங்கள் எங்களுக்காக சிந்திய கண்ணீரையும், உம் திருமகனாகிய இயேசு கிறிஸ்துவுக்குநாங்கள் உண்மையுள்ளவர்களாக இருக்க நீர் செய்த ஜெபங்களையும் பரிகாரங்களையும் ஒரு போதும் மறந்துவிடாதேயும். நன்றி உணர்வின்றி துரோகங்கள் புரிந்த நாங்கள், நீர் அளிக்கும் ஆறுதலால் ஆறுதலடைந்து, உம்மிடம் மன்றாடுகிறோம். சமாதானத்தின் தாயே, எங்கள் ஜெபங்களை நிராகரியாமல் எல்லாவற்றிற்கும் மேலாக இயேசுவை நேசிக்கும் அருளை எங்களுக்கு பரிந்து பேசி பெற்றுத்தருவீராக. பரிசுத்தமான வாழ்க்கையை வாழ்வதன் மூலம் நாங்கள் உம்மை ஆறுதல் பெறச்செய்து, கிறிஸ்து தனது சிலுவையால் பெற்ற நித்திய வாழ்வை நிறைவாக பெற்றுக்கொள்வோமாகஆமென்.

கட்டுரையாளர்

No comments:

Post a Comment

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD