Showing posts with label சுட்டுரை. Show all posts
Showing posts with label சுட்டுரை. Show all posts

இயேசுவின் உவமைகளும் உதாரணங்களும் - 5

இயேசுவின் உவமைகளும் உதாரணங்களும்  - 5
பா.கா. அலெக்ஸ் சகாயரஜ்
- - - - - - - - 
நற்செய்திப் பகுதி: மாற்கு 4: 21  (லூக் 8:16-18)
சூழ்நிலை:
செய்கின்ற ஒவ்வொரு செயலும் பலன் தரக்கூடியதாகவும், பிறருக்கு நலம் பயக்க கூடியயதாகவும் இறைவார்த்தையை  கேட்கிறவர்களாக மட்டுமே இல்லாமல் அதை செயல்படுத்தும் செயல்வீரர்களாக மாறாமல் இருந்த சீடர்களுக்கும் உடனிருந்த மக்களுக்கும் விளக்கு உவமையின் மூலமாக உணர்த்தும் இயேசு….
உதாரணம்: விளக்கைக் கொண்டு வருவது எதற்காக?”
-----------------------------------------

மாற்கு நற்செய்தியில்; இம்மாதம் நமக்கு இயேசு கொடுக்கின்ற உதாரணப் பொருள்விளக்கு’. கடவுளால் முதல் முதலாக உண்டாக்கப்பட்டது ஒளி(தொநூ1:3). அந்த ஒளியைத் தாங்கியிருக்கிற விளக்கினை வைத்து அங்கு கூடியிருப்பவர்களுக்கு மனித வாழ்க்கை எத்தகையதாக இருக்க வேண்டுமென்பதை விளக்குகிறார்
விளக்கின் பயன்கள் இரண்டு
.) இருளை விளக்கி ஒளியைத் தருகிறது. .) இருக்கின்றவற்றை இருக்கின்றதாகவே காண்பிக்கிறது(உண்மையை எண்பிக்கிறது). 

இஸ்ரயேல் மக்கள் வரலாற்றிலும் சரி, இயேசுவின் காலத்திலும் சரி விளக்கானது அவர்களுடைய வாழ்வின் சரிநிகர் பகுதியாக அமைந்திருக்கிறது. கடவுளின் பிரசன்னம் என்றாலும் சரி (வி. 25:3 மெனோரா), திருமண நிகழ்வுகளானாலும் சரி (மத் 25:01), தினசரி வாழ்க்கையானாலும் சரி (லூக்15:09) விளக்கு அவர்களுடைய வாழ்வின் அங்கமாயுள்ளது. அம்மக்களுக்கு மிகவும் பரிட்சையமான பொருளை உதாரணப்படுத்தி இயேசு தன் செய்தியை பகிர்கிறார். இந்த விளக்கு வாழ்வையும், வளத்தையும், வழிகாட்டுதலையும் பொதுவாக  உருவகபடுத்தப்படுவதாக நம்பப்படுகிறது
கடவுள் நமக்கு விடுக்கும் செய்தி: திருவருட்சாதனங்களால் நமக்கு அருளப்பட்டுள்ள தூய ஆவியின் அருளும், கொடைகளையும் நாம் மற்றவர்களுக்காக பயன்படுத்தவேண்டும், மரக்காலி; உள்ளேயோ அல்லது கட்டிலுக்கடியில் வைக்கப்படும் விளக்கு எவ்வாறு பயனற்றதோ, அதுபோலவே பிறருக்கு உதவாத நாமும், கடவுளிடமிருந்து நாம் பெறும் கொடையும், அருளும் நம் வாழ்க்கையும் பயனற்றதாய் போய்விடுகிறது.  
கடவுளின் அருளையும், கொடையையும் பெற்ற நம்மில் பலபேர் மரக்காலுக்குள்ளும், கட்டிலுக்கடியிலும் வைக்கபட்ட விளக்கைப்போல அந்த அருளை தங்களிலேயும், பிறரிலும் உணராதவர்களாய் இருக்கிறோம்.
திருவருட்சாதனங்கள் மூலமாக கடவுளின் அருளால், எரிகின்ற விளக்காய் நம் வாழ்வை ஒளிர்வித்தவர்களாகவும், பிறர் வாழ்க்கையை நம் நற்செயல்களால் ஒளிர்விக்கிறவர்களாகவும் மாற இந்த விளக்கு உதாரணம் நம்மை அழைக்கின்றது. வாருங்கள் இயேசுவால் ஒளிர்வோம்! இயேசுவாய் ஒளிர்விப்போம்

கேள்விதன் வாழ்க்கையை தியாகமாக்கி நம் வாழ்க்கையை உயர்த்தும் விளக்கைப்போல என் வாழ்க்கையை தியாகப்படுத்தி பிறர் வாழ்க்கைக்கு உதவுவேனா

கட்டுரையாளர்



இயேசுவின் உவமைகளும் உதாரணங்களும் - 4

யேசுவின் உவமைகளும் உதாரணங்களும் -  4
பா. கா. அலெக்ஸ் சகாயரஜ்

நற்செய்திப் பகுதி :       மாற்கு 4: 3,4  (மத்; 13:3,4 , லூக் 8: 5 )
சூழ்நிலை
 கடலோரத்தில் கற்பிக்கத் தொடங்கி ஒரு படகில் ஏறி உவமைகளின் வாயிலாக போதிக்கும் தருணம்….
உதாரணம்
இதோ, கேளுங்கள், விதைப்பவர் ஒருவர் விதைக்கச் சென்றார். அவர் விதைக்கும்போது சில விதைகள் வழியோரம் விழுந்தன.”
------------------------
மாற்கு நற்செய்தியாளர் இம்மாததத்திற்கு நமக்கு தியானிக்க கொடுக்கின்ற உதாரணம் விதைப்பவரும் விதையும். கத்தோலிக்க கிறிஸ்தவர்களாகிய நமக்கு மிகவும் அதிகமாக தியானிக்கப்பட்ட அல்லது வாசிக்கப்பட்ட பகுதியாக இப்பகுதி இருப்பதை நாம் பார்க்கிறோம். மாற்கு நற்செய்தியாளர் தனது மூன்றாவது அதிகாரம் வரை இயேசு பல்வேறு விதமான மக்களை சந்திப்பதையும் அவர்களின் தேவைகளை பல்வேறு புதுமைகளோடு பூர்த்தி செய்வதையும் நமக்கு எடுத்தியம்புகிறார். இயேசு இந்த உவமையையும் அதன் உதாரணங்களையும் பயன்படுத்துவதற்கு இரண்டு முக்கிய காரணங்கள் தென்படுகின்றன
இயேசுவை பின்பற்றிய பெரும்பாலான மக்கள் விவசாய தொழில் புரியும் மக்களாக இருக்கின்றனர். எனவே, விதைத்தல் என்பது அவர்களுக்கு பரிட்சயமான பணி.
இதுவரை அவர் கண்ட மக்கள் புதுமைகளை புசித்தவர்களாக தென்பட்டார்களே ஒழிய கேட்கின்ற இறைவார்த்தையை தியானித்து பலன் தந்தவர்களாக தெரியவில்லை.
இக்காரணங்களின் நிமித்தத்தினால் இயேசு இவ்வுவமையையும் உதாரணங்களையும் நமக்கு எடுத்துரைக்கிறார். விதைக்கப்படுகின்றன விதை இறைவார்த்தையாக அமைகின்றது (லூக்8:11). இறைவார்த்தையை மற்றவரோடு பகிருகின்ற இறைஊழியர் விதைக்கின்றவராக அமைகிறார்(1கொ3:5-9). விதைக்கப்படுகின்ற ஒவ்வொரு விதையும் முளைப்பதற்குமுன் நிலங்கள் நன்முறையில் பண்படுத்தப்பட்டவைகளாக அமைந்திருத்தல் இன்றியதையாத ஒன்றாகும். இயேசு எடுத்தியம்புகின்ற இந்த உதாரணங்கள் மனிதர்களின் நான்கு மனநிலைகளை பிரதிபலிப்பவனவாக அமைகின்றன

1.இறுகிய மனநிலையுடையவர்கள் (மாற்கு4:4,15): இவ்வகை மனிதர்கள் அதிகமாக மிதிபட்ட பாதையைப்போன்று தங்களையே கடினப்படுத்திக்கொண்டு விதையை ஏற்றுக்கொள்ளாமல் தங்களுக்கென்று ஒரு தடுப்பை ஏற்படுத்திக்கொண்டவர்களாக திகழ்கின்றனர்.
2.மேலோட்டமான மனநிலையுடையவர்கள் (மாற்கு4:5-6,16-17);  : இவ்வகை மனிதர்கள் ஆழமில்லா மற்றும் மேலோட்டமான மனநிலையை கொண்டவர்களாகவும், குறுகிய நாட்களே இறைவார்த்தையை வாழ்வாக்குபவர்களாகவும் இருக்கின்றனர்.
3.நெருக்கப்பட்ட மனநிலையுடையவர்கள் (மாற்கு4:7, 18-19)  : இவ்வகை மனிதர்கள் விதையாகிய இறைவார்த்தை ஏற்றுக்கொள்பவர்களாகவும் ஆனால் பல்வேறு உலகக்காரியங்களை பல்வேறு களைகளாகக் கொண்டு நல்விதை பலனளிக்காமல் போவதற்கு அவர்களே காரணர்களாக அமைகின்றனர்.      
4.பலனளிக்கும் மனநிலையுடையவர்கள் (மாற்கு4:8,20) : இவ்வகை மனிதர்கள், வார்த்தை மனுவுருவானார் என்பதற்கேற்ப இறைவார்த்தைக்கு தங்கள் வாழ்வின் மூலம் வாழ்வளிப்பவர்கள். விதைகளாக விதைக்கப்பட்ட iறாவார்த்தைகள் நல்ல விளைச்சலை இவ்வகை மனிதர்களிலே நாம் பார்க்க இயலும்.

கேள்வி
அதிவேகமான உலகிலே தேவையற்ற களைகளப்போல தேவையற்ற தொல்லைகளி;டமிருந்து நல்விதையான இறைவார்த்தையை எப்படி நம்முள் வளர்த்து பலனளிக்கப்போகிறோம் சிந்திப்போம்

- - - - - - - - - - 
கட்டுரையாளர்


இயேசுவின் உவமைகளும் உதாரணங்களும் - 3


இயேசுவின்
உவமைகளும் உதாரணங்களும் - 3
- பா. கா. அலெக்ஸ் சகாயராஜ்
- - - - -

நற்செய்திப் பகுதி : மாற்கு 3:27  (மத்; 12:29 , லூக் 11: 21)
சூழ்நிலை:
இயேசு பெயல்சபூலைக் கொண்டு பேய்களை ஓட்டுகிறார் என்ற  குற்றச்சாட்டு
உதாரணம்
வலியவரைக் கட்டினாலின்றி அவ்வலியவருடைய வீட்டுக்குள் நுழைந்து அவருடைய பொருள்களை எவராலும் கொள்ளையிட முடியாது: அவரைக் கட்டி வைத்த பிறகுதான் அவருடைய வீட்டைக் கொள்ளையிட முடியும்.”
-----------------


இறைவார்த்தையில் ஆண்டவரை தேடுபவர்களே உங்கள் அனைவரையும் இப்புதிய வருடத்தில் புதிய நம்பிக்கையோடு தொடங்கியருக்கிற உங்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சத்தின் ஆழத்திலிருந்து புத்தாண்டு நல்லவாழ்த்துக்கள்.

இன்றைய மாதத்திற்கு மாற்கு நற்செய்தியாளர் மூலம் நமக்கு இயேசு வெளிப்படத்துகிற அடுத்த உதாரணம் தான் இப்பொழுது நாம் சிந்திக்கிறோம். இயேசுவின் காலத்திலும் சரி, பழைய ஏற்பாட்டிலும் சரி கொள்ளையிடுதல் என்கிற நிகழ்வு அக்காலச்சூழ்நிலையில் பொதுவாக இருந்ததாதினால் தான் என்னவோ கடவுள் மோசேவிடம் கொடுத்த கட்டளைகளில் ஒன்றாககளவு செய்யாதே” (வி..20:15)  என்று பார்க்கிறோம். களவு செய்ததற்கு பாவக்கழுவாய் பலிகள் என்னவெல்லாம் செய்ய வேண்டுமென்பதை நாம் லேவியர்6:1-7 வரை பார்க்கிறோம். ஆகவே, நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து தம்முடைய கருத்தினை அந்த எளிய மக்களுக்கு தெளிவாக்க இந்த உதாரணம் மிகவும் ஏற்றதாக அமைகிறது

இந்த பகுதியில் நாம் அறிந்துக்கொள்ள வேண்டியது என்னவென்றால் ஒரு பொருள் கொள்ளையிடப்படுவது அங்கிருக்கின்ற வலிமையாலனைப் பொருத்;துதான் என்பது இயேசுவின் உதாரணத்தின் மூலம் நமக்கு வெளிப்படத்தப்படுகிறது. நல்ல சமாரியன் உவமையில் சமாரியனிடமிருந்து பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டது என்றால் சமாரியன் அந்த கொள்ளையர்களைவிட வலிமையில்லாதவனாக இருப்பதை நாம் உணருகின்றோம். இந்நற்செய்தியில் இயேசு பேய்களை ஓட்டும்போது ஏற்படுகின்ற விவாதத்தில்தான் இயேசு இந்த உதாரணத்தை பயன்படுத்துகிறார். அன்றைக்கு இயேசுவையே சாத்தான் சோதித்ததென்றால் இன்று நமக்கு முன்பும் சோதனைகளாக பல்வேறு  சாத்தான்கள் பலவழிகளில் தோன்றலாம். அவற்றை நாம் எப்படி சந்திக்க இருக்கிறோம். “அவள் வித்து உன் தலையைக் காயப்படுத்தும்” (தொநூ3:15) பிறந்திருக்கிற பாலன் இயேசு அவைகளைவிட வலிமையானவர் என்பதை உணர்ந்து, வலிமையுள்ள இயேசுவை அனைத்திற்கும் முன்னிருத்தி நம்மையும் நம் ஆன்மாவையும் காத்துக்கொள்வோம்.


கேள்வி: நம்மை பாதுகாத்துக்கொள்ள நமக்கு யாரை வலிமையானவராக முன்னிருத்த  போகிறோம்?

கட்டுரையாளார்

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD