ஈஸ்டர் பூக்கள்

ஈஸ்டர் பூக்கள்

அருள்பணி. சு.மரியசூசை, திருச்சி.


நள்ளிரவு வேளையிலே, நம்ம ஊரு கோவிலிலே 
நாங்களெல்லாம் கூடி வந்து, நாவாரப் பாடி நின்னு 
நச்சுனு கொண்டாடிய நம்ம ஈஸ்டர் திருநாள் 
நன்றாக நினைவிருக்கு, நெஞ்செல்லாம் நிறைஞ்சிருக்கு.

நாற்பது நாள் காத்திருந்து, நாளெல்லாம் செபித்திருந்து 
நலிந்தவருக்கு உதவி செய்து, நலம் பெற நோன்பிருந்து 
நல்லாத்தான் தயாரித்தோம், நம்பிக்கையா எதிர்பார்த்தோம் 
நமக்கும் ஈஸ்டர் வருமுன்னு, நல்ல சேதி தருமுன்னு.

நிலவாய் இயேசு, நீ வருவேனு நினச்சுக்கிட்டு நாங்க இருக்கோம். 
நலமாக வாழ்வோமுனு நம்பிக்கையை தாருமய்யா!
நித்தியமாய் சத்தியமாய் என் சாமி நீயிருக்க
நிறைவாய் நிம்மதியாய் நாங்க வாழச் செய்யுமய்யா!

நடுநிசி வானமாய் நிக்குது எம் வாழ்க்கை 
நடுவானின் நட்சத்திரமாய் நீ வந்து ஜொலிக்கனுமே! 
நடுக்கடலின் கப்பலாய் நடுங்குது எம் வாழ்க்கை 
நம்பிக்கையின் நங்கூரமாய் நீ வந்து தாங்கனுமே!

நானிலம் எல்லாம் பூக்கனுமே! 
நந்தவனமாய் அது மாறனுமே!
நாங்களும் உம்மோடு உயிர்க்கணுமே! 
நாளெல்லாம் உலகை ஜெயிக்கணுமே!!




No comments:

Post a Comment

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD