அன்னையை அறிவோம் -2 - துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னை


அன்னையை அறிவோம் - 2 
துன்ப முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னை

திருத்தொண்டர் வில்சன், சென்னை

ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த செல்வந்தரான வொல்ப்காங் லாங்கென்மண்டல்- யை (1586-1637) அவருடைய மனைவி சோபியா ரெண்ட்சி விவாகரத்து செய்துவிடும் முயற்சியில் ஈடுபட்டார்அது அவருக்கு மிகுந்த வருத்தத்தை கொடுத்தது. தன் திருமண வாழ்வை காப்பாற்றிக் கொள்ள, புகழ்பெற்ற இயேசு சபை குருவான ஜேக்கப் ரெம் அவர்களின் உதவியை நாடினார். 20-9-1615 அன்று நான்காவது முறையாக வொல்ப்காங் அருட்தந்தையை சந்திக்க வந்தபோது தன் திருமணநாள் அன்று அவர்களின் கைகளில் கட்டிய ரிப்பனைக் கொண்டுவந்து அருட்தந்தையிடம் கொடுத்தார். அந்த ஊரின் கலாச்சாரப்படி திருமண நாளின்போது மணமகனின் கையை மணமகளின் கையோடு இணைத்து இருமனங்களின் ஒன்றிப்பின் அடையாளமாக கட்டுவது வழக்கம். அருட்தந்தை அந்த ரிப்பனை பனிமயமாதா திருப்படத்தின் முன்பு உயர்த்திப் பிடித்து அதிலிருந்த ஒவ்வொரு முடிச்சையும் அவிழ்க்கத் தொடங்கினார். அந்த முடிச்சுகளை அவிழ்க்கும் போது மிகவும் பிரகாசமான ஒளி அதன் மீது வந்து இறங்கியது. இந்த ஒளி அன்னை அவர்களின் ஜெபங்களை கேட்டருளினார் என்பதன் அடையாளகாய்த் திகழ்ந்தது. அதனைத் தொடர்ந்து பிரிந்து செல்ல நினைத்த அவரின் மனைவியும் அற்புதமான விதத்தில் மீண்டும் ஒன்று சேர்ந்து, வாழ்நாள் முழுவதும் ஒருவரை ஒருவர் நேசித்து அன்பு செய்து விட்டுக் கொடுத்து நல்ல கிறிஸ்தவ குடும்பமாக வாழ்ந்தனர்.

எப்படி இந்த பக்தி தொடங்கியது?
18ம் நூற்றாண்டை வரவேற்கும் விதமாக அருட்தந்தை ஹெராயின்ஸ் அம்பிரியஸ் லங்கென்மண்டல் (1641-1718) ஒரு புதிய பீடத்தை ஆலயத்தில் நிறுவினார். இப்பீடத்தின் பின்புற சுவற்றில் வைக்க ஓவியர் ஜோகன் ஜார்ஜ் ஷ்மிட்னரிடம் அன்னையின் ஓவியத்தை வரைந்து தரச் சொன்னார். ஓவியர் ஜோகன், வொல்ப்காங் மற்றும் அருட்தந்தை ஜேக்கப் ரெம் இவர்கள் வாழ்வில் நிகழ்ந்த அற்புதத்தால் தூண்டப்பட்டு அந்நிகழ்வை ஓவியமாக வரைந்து தந்தார். அந்த ஓவியமே பிற்காலத்தில் முடிச்சுகளைஅவிழ்க்கும் அன்னையாக பெயர் பெற்று இன்றுவரை மக்கள் நல்வாழ்வு பெற இறைவனிடம் பரிந்துரை செய்து கொண்டிருக்கின்றார்.

ஆனால் இந்த முடிச்சு என்றால் என்ன?
நம்முடைய வாழ்விலே எந்தவொரு தீர்வும் காணமுடியாத பிரச்சினைகள் மற்றும் போராட்டங்கள் பல உள்ளன. நம்குடும்பத்தில் உள்ள கவலைகள், குழப்பங்கள், பெற்றோர்-குழந்தைகளுக்கு இடையே புரிந்துணர்வுயின்மை, அவமதிப்பு, வன்முறை, கணவன் - மனைவிக்கு இடையே உள்ள ஆழ்மனக்காயங்கள், வீட்டில் மகிழ்ச்சி மற்றும் சமாதானமின்மை. பிரிந்த தம்பதிசயர்கள், போதை பழக்கங்களுக்கு அடிமையான மகன் அல்லது மகள், உடல்நலக்குறைவு, கருக்கலைப்பு, மன அழுத்தம், வேலையின்மை, பயம், தனிமை என எத்தனையோ முடிச்சுகள் நம் வாழ்க்கையில் உள்ளன. இத்துன்ப முடிச்சுகளை அவிழ்த்து நம்வாழ்வை வளமான நலமான ஒளிமயமானதாய் நம் அன்னை மாற்றுகின்றாள்.
நாளுக்கு நாள் பல கிறித்தவர்கள் முழங்கால் படியிட்டு உண்மையான பக்தியுடன் ஜெபிக்க, பல குடும்பங்களில் பிரச்சனைகள் நீங்கியது. பல நோய்கள் குணமாகியது. பல குடும்பங்கள் திருஅவைக்குத் திரும்பினர். பலர் வேலை வாய்ப்புகள் பெற்றனர். பல உறவுகள் மாற்றங்கள் பெற்று சமரசமடைந்தது. இந்த காரணங்களுக்காகவே, மரியா முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னை என மக்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.



ஓவியமும், அதன் விளக்கமும்
6 அடி நீளமும் 4 அடி அகலமும் கொண்ட முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையின் தெய்வீகத்  திருப்படம் கி.பி. 1700- இல் இருந்து ஆக்ஸ்போர்ட்  நகரில் உள்ள  புனித பேதுரு தேவாலயத்தில் மக்களின் வேண்டுதலுக்காக வைக்கப்பட்டது. இப்படம் அன்னை மரியா மோட்சத்திற்குஅம் பூமிக்கும் இடையில் நிற்பது போலவும் அவரை சுற்றி பேரொளி நிறைந்திருப்பதை போலவும் காட்சி அளிக்கிறது. அன்னை மரியா இறைவனின் தாய் என்பதை உணர்த்த தூய ஆவியார் புறா வடிவில் அன்னையின் தலைமீது இறங்குவதைப் போலவும். அன்னை மரியா உலகிற்கு அரசியாய் விளங்குகிறார் என்பதை குறிக்க கருஞ் சிவப்பு மற்றும் நீல நிற உடை அணிந்து இருக்கின்றார். பன்னிரு திருத்துதர்களின் அன்னை என்பதைக் காட்ட பன்னிரு விண்மீன்களை மணிமுடியாய் சூடி இருக்கிறார். அலகையை வெற்றி கொண்டதன் அடையாளமாக பாதங்களில் பாம்பை மிதித்தவளாய் நிற்கின்றார். வானதூதர்களின் அரசி என்பதை உணர்த்த வானதூதர்கள் அவரை சூழ்ந்து நிற்பதைப் போலவும் கைகளில் பல முடிச்சுகளைக் கொண்ட கயிற்றில் ஒரு முடிச்சை அவிழ்ப்பது போல இத்திருப்படமானது வரையப்பட்டுள்ளது.

பக்தி வளர்ந்த விதம்
பதினெட்டாம் நூற்றாண்டில் மக்கள் பலர் இந்த ஆலயத்தில் வந்து ஜெபிக்கத் தொடங்கினார் ரஷ்யாவில் செர்னோபில் என்ற இடத்தில் இருந்த அணு உலை வெடித்து மக்கள் அனைவரும் கதிரியக்க பாதிப்புக்குள்ளாகி பலர் பலியாகியும் புற்றுநோயால் அவதியுற்றும் பலரின் வாழ்வு கேள்விக்குறியானபோது அந்த பகுதியிலிருந்த மக்கள் அன்னையிடம் ஜெபித்தனர். அற்புதமான விதத்திலே அதிசயமான வகையில் அனைவரும் சுகம் பெற்று, அந்த துயரத்திலிருந்து மீண்டும் புத்துணர்ச்சி பெற்றனர்.
முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னைக்கு முதல் சிற்றாலயம் 1989 ம்ஆண்டு ஆஸ்திரியாவில் உள்ள ஸ்டீரியா என்ற இடத்தில் கட்டப்பட்டது. இந்தஆலயத்தில் வைக்கப்பட்டுள்ள படம்ஓவியர் பிரான்ஸ் அவர்களால் வரையப்பட்டது. செர்னோபில் துயரத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த ஓவியம் வரையபட்டதால் இது ஜோகன் வரைந்த ஓவியத்திற்கு சற்று மாறுபட்டதாய் இருந்தது.
1998இல் டென்னிஸ் சூசல் ப்ரம் அவர்கள் திருஅவையின் ஒப்புதலோடு எழுதி வெளியிட்ட முதல் முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையின் நவநாள் புத்தகம் ஏறக்குறைய 20 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு மக்களால் ஜெபிக்கப்பட்டது. தென்னமெரிக்க நாடுகளில் இந்த பக்தி அதிவேகமாக பரவ முக்கியக் காரணம் நவநாள் முயற்சிகளை பக்தியோடு செய்த மக்கள் பெற்ற அற்புதங்களே.
நம் தமிழகத்தில் செங்கல்பட்டு மறைமாவட்டத்திலுள்ள தளம்பூரில் முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையின் சிற்றாலயம் அமைந்துள்ளது

திருத்தந்தை பிரான்சிசும் முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையும்

திருத்தந்தை பிரான்சிஸ் பியுனோஸ்அயரசின் ஆயராக திருநிலைப்படுத்தப்படும்முன் ஜெர்மனியில் பயிலுகின்ற போது முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையின் பால் ஈர்க்கப்பட்டு, முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னையின் திருப்படத்தை அர்ஜென்டினாவுக்கு எடுத்துச் சென்றார். அவர் திருத்தந்தை  பதினாறாம் ஆசீர்வாதப்பர் திருஅவையின் தலைவராகப்  பொறுப்பேற்ற பொழுது முடிச்சுகளைஅவிழ்க்கும் அன்னையின் திருஉருவம் பதித்த இரச பாத்திரத்தை பரிசாகக் கொடுத்தார். திருத்தந்தை பிரான்சிசும் திருஅவை தலைவராக தேர்வு செய்யப்பட்ட பொழுது அதே பொற்கொல்லனால் செய்யப்பட்ட முடிச்சுகளை அவிழ்க்கும்அன்னையின் உருவம் பதித்த இரச பாத்திரத்தை அர்ஜென்டினா மக்கள் சார்பில் அவருக்கு வழங்கினார்கள். திருத்தந்தை முடிச்சுகளை அவிழ்க்கும் அன்னை மீது இருந்த அளப்பறிய பக்தியை பார்த்த வத்திகான்நகரத்திற்கான தென்கொரியதூதர் முடிச்சுகளைஅவிழ்க்கும் அன்னையின் கொரிய ஓவியத்தை அவருக்கு பரிசாகக் கொடுத்தார்.


நாம் கற்றுக் கொள்ள வேண்டியவை

பிரச்சனைகள் இருக்கும் இடத்தில் அன்னையின் பிரசன்னம் இருக்கும்.

முழுமனதுடன் நம்மையே அர்பணித்து ஜெபிக்கும் போது நமக்காக பரிந்துரைக்க அன்னை என்றும் தயாராக இருக்கின்றார்.

ஜெபம்

என்றும் கன்னியான புனித மரியே, தேவையிலிருக்கிற பிள்ளைகளுக்கு உதவி செய்ய மறுக்காத உண்மையான அன்பின் தாயே, உம் தயவுள்ள கரம் என்னைத் தாங்குவதாக. உம் தெய்வீக அன்பு என்னை நிறப்புவதாக, உம்முடைய கருணைக் கண்கள், என் வாழ்வில் இருக்கும் முடிச்சுகளை பார்ப்பதாக. நான் எவ்வளவு விரக்தியடைந்திருக்கிறேன்; என்பதையும் என் வலிகள், வேதனைகள் எல்லாவற்றையும் நீர் நன்றாக அறிவீர். என் வாழ்வின் முடிச்சுகளை உம் கரங்களில் ஒப்படைத்துவிடுகிறேன். உங்கள் கரங்களால் அவிழ்க்க முடியாத முடிச்சுகள் இவ்வுலகில் ஏதும் இல்லை. சக்திவாய்ந்த தாயே, உம்முடைய கிருபையினாலும், கடவுளின் மகிமைக்காகவும் ஒருமுறை என் வாழ்வில் இருக்கும் முடிச்சுகளை நீக்கிவிட நான்உம்மை வேண்டிக்கொள்கிறேன். நீயே என் நம்பிக்கை. என் ஒரே ஆறுதல், என் பவீனத்தின் பலம், என் அடைக்கலத்தை செழுமைப்படுத்தும், என்னை வழிநடத்தும், என்னைக் காப்பாற்றும். ஆமென்.

No comments:

Post a Comment

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD