இயேசுவின் உவமைகளும் உதாரணங்களும் - 2

இயேசுவின் உவமைகளும் உதாரணங்களும் - 2
பா. கா. அலெக்ஸ் சகாயராஜ்
= = = = = = = 
நற்செய்தி: மாற்கு 
பகுதி : மாற்கு 2:22  (மத்; 9:17 , லூக் 5: 37)
சூழ்நிலை: நோன்பு பற்றிய கேள்வி
உதாரணம்:  பழைய தோற்பையில் புதிய திராட்சை இரசம்


இறையேசுவில் பிரியமுள்ள சகோதர சகோதரிகளே, ஆன்மீக மலரின் ஆன்மிக வாசககர்களே உங்களை மீண்டும் இந்த மாதம் வேறொரு இயேசுவின் உதாரணத்தின் விளக்கத்தோடு சந்திப்பதிலே மிக்க மகழ்ச்சியடைகிறேன்மாற்கு நற்செய்தியில் இயேசு பயன்படுத்தும் இரண்டாவது பொருளும் நோன்பு பற்றிய விவாதத்திலே தான் இடம் பெறுகிறது. “பழைய தோற்பைகளில், எவரும் புதிய திராட்சை மதுவை ஊற்றிவைத்தால் மது தோற்பைகளை வெடிக்கச்செய்யும்;: மதுவும் தோற்பைகளும் பாழாகும். புதிய மது புதுத் தோற்பைகளுக்கு ஏற்றது.”
ஒவ்வொரு காலகட்டத்திலும் மனிதர்கள் அந்தந்த காலகட்டத்திற்கேற்ப இருக்கின்ற பொருட்களை வைத்து அவர்களுடைய பேச்சு வழக்கு அமைவதுபோல இயேசுவின் காலகட்டத்தில் கிடைக்கப்பெற்ற மற்றும் பொதுவாக அனைவராலும் பயன்படுத்தப்பட்ட ஒரு பொருளைத்தான் இயேசு இப்பகுதியில் மேற்கோள் காட்டுகிறார்
இயேசு தன் கருத்தினை பகிர்வதற்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் ஒன்றையொன்று சார்ந்தவனவாக இருப்பதை நாம் பார்க்க முடிகிறது. இயேசுவின் காலகட்டத்திலேயும் அதற்கு முன்பேயும் அதற்கு பின்னும் சரி அப்பகுதியில் திராட்சையின் விளைச்சல் அதிகம் என்பதால் அவர்களின் எல்லா மகிழ்ச்சிக் கொண்டாட்டங்களிலும் திராட்சை இரசம் பயன்படுத்துவது அவர்களின் கலாச்சாரம். அவர்களுக்கு அதிகம் கால்நடைகள் இருந்தபடியால் அவைகளின் தோலை தோற்பைகளாக பயன்படுத்துவது அவர்களின் வழக்கமாக அமைந்திருந்தது. அம்மக்களுக்கு அவர்கள் பயன்படுத்துகிற பொருட்களை வைத்து தெளிவுபடுத்தலாம் என்கிற மனதோடு தோற்பையையும், திராட்சை இரசத்தையும் உதாரணமாக பயன்படுத்திருக்கிறார் இயேசு
இப்பொருட்களின் மூலமாக இப்பின்வரும் உண்மையை நமக்கு வெளிக்கொணர்கிறார். புதிய திராட்சை இரசம் கிறிஸ்துவின் புதிய உடன்படிக்கையான அவரின் தியாகப்பலியை நமக்கு காண்பிக்கிறது. பழைய தோற்பையோ நமது பழைய மனநிலையை காண்பிக்கிறது
ஆக, இயேசுவையும் அவரின் போதனைகளையும் நாம் ஏற்றவர்களாக வாழவேண்டுமெனில் புதிய மனநிலையை அதாவது புனித பவுல் கூறுவதுபோலஇயேசுவின் மனிநிலைக் கொண்டவர்களாக மாற வேண்டும் (பிலி2:5)” இல்லையெனில் இயேசுவின் காலகட்டத்திலே வாழ்ந்த பரிசேயர்கள், சதுசேயர்கள், இறைவல்லுனர்கள் போல  கடவுள் ஒரு கருவியாக பயன்படுத்திய மோசே அளித்த பழைய சட்டதிட்டங்களையே பெரிதாக கருதிய அவர்களால் புதிய திராட்சை ரசமான கடவுளின் மகனான இயேசுவையும் அவரின் புதிய போதனைகளையும் அவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. இறையாட்சிக்கும் உட்பட இயலவில்லை. எனவே நாம் இயேசுவின் இறையாட்சிக்கு உட்பட, அவரின் மனநிலை கொண்ட மக்களாக வாழும்போது புதிய தோற்பையில் புதிய திராட்சை இரசத்தைப் போன்று பாதுகாப்பாக இறைவனின் கரங்களில் தவழ்வோம். இறைவனினட ஆசீர் பெறுவோம்.

கட்டுரையாளர்


No comments:

Post a Comment

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD