மருத்துவக் குறிப்பு - 2 - பிரண்டை

பிரண்டை



உனவு விஷம் / அல்லது வயிற்று வலிக்கு பிரண்டை

என்ன விஷம்னாலும் பிரண்டைதான் முதல் மருந்து. நுனிப் பிரண்டையைப் பிடுங்கி நார் எடுத்துட்டு நல்லெண்ண்ய்யில் போட்டு நல்லா வதக்கி துவையல் அரைத்துக்கொடுத்தால் வயிறு சரியாகும்.”

நுனியாப் பாத்துப் பறிக்கத் தெரியாம, அடித்தண்டையும் சேர்த்துப் பறிச்சுச் சமைச்சா அரிப்பும் எரிச்சலுமா இருக்கும்.”

வயித்துப் பிரச்சனைக்குப் பிரண்டையத் துவையலா அரச்சுச் சாப்பிட்டாலே சரியாகிவிடும். குழந்தைகங்களுக்கு உண்டாகுற வாந்தி பேதி பிரச்சனக்கும் பிரண்டை அற்புதமான மருந்து

பிரண்டைய நல்லா உலர்த்தி சாம்பல் மாதிரி வெச்சுக்கணும். ஒரு கிலோ சாம்பலை மூணு லிட்டர் தண்ணியில கரைச்சு நல்லா வடிகட்டி அரை நாளைக்குத் தெளிய வைக்கணும். அதைப் பீங்கான் பாத்திரத்தில் ஊத்தி பத்து நாளைக்கு வெயில்ல காய வைக்கணும். நீர் நல்லா சுண்டிப் போய் உப்பு மாதிரி படிஞ்சிடும். குழந்தைங்களுக்கு வாந்தி பேதி வர்றப்ப எல்லாம் இந்த உப்புல ஒரு கிராம் அளவுக்கு எடுத்து அதைப் பால்ல கலந்து கொடுத்தா உடனே சரியாப் போயிடும். வாந்தி பேதி நிக்கிறது மட்டுமில்லகுழந்தைங்களுக்கு நல்லா பசி எடுக்கவும் செய்யும்.”

கை கால் வலிக்கு பிரண்டை

கை காலு அடிபட்டு ஏற்படுகிற வலிக்கும் பிரண்டை நல்ல மருந்து. பிரண்டையோட வேரைக் கழுவி எடுத்து நல்லா உலர வெச்சு அதைப் பொடியாக்கி சாப்பிட்டா உடைஞ்சு போன எலும்புகூட நல்லா ஒட்டிக்கும். “

லேசான வலிக்கு பிரண்டையோட வேரைப் பிடுங்கி வெந்நீர்ல குழைச்சு வலி எடுக்கிற இடத்துல பத்துப் போட்டாலே சரியாகிடும்.” 

ஆதாரம்

  • ரேவதி  அவர்களின் வைத்திய அம்மணியும், .சொலவடைவாசம்பாவும்,” - பக்.  11- 17.

No comments:

Post a Comment

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD