மருத்துவக் குறிப்பு - 3 - வெற்றிலை


வெற்றிலை



வெத்தலை/ வெற்றிலை உடல் நலனுக்கு நன்மை பயக்கும் ஒரு கொடி. அதனால்தான் தாம்பூலத்தட்டுகளில் அவைகளைப் பார்க்கிறோம்.

வெற்றிலையின் பின்னால் இருக்கும் நரம்புகளில் சிறு சிறு பூச்சிகள் இருக்க வாய்ப்பு உண்டு. எனவே வெற்றிலையை நன்றாகக் கழுவி, நரம்பை ஒட்டி சுத்தம் செய்து பயன்படுத்த வேண்டும்.”

தனியாக வெற்றிலையை மெல்லக் கூடாது. நமது நாக்கின் நரம்புகளை அவை பதம் பார்க்கலாம்.”

அதே போல எப்பப் பார்த்தாலும் வெறும் பாக்கையும் மெல்லக் கூடாது. உடம்புல இரத்தம் சுண்டிப் போய் முகமெல்லாம் வெளுத்துப் போகும். வெற்றிலைப் பாக்கைத் தனிதனியாப் போட்டா உடம்புக்குத்தான் கெடுதி.”

உணவுக்குப் பின் வெற்றிலை பாக்குப் போடுவது உணவைச் செறிக்க உதவும். நம் உடம்பிற்கு ஒத்துக்கொள்ளாததை சாப்பிட்டாக் கூட அதைச் சரி செய்யும் வெற்றிலை.

சின்னப் பிள்ளைகளுக்கு பூச்சி கடிச்சிருந்தா, 5 வெற்றிலை, 10 மிளகைப் பொடிச்சுத் தண்ணியில பொட்டுக் காய்ச்சி தினமும் 2 வேளை குடிச்சாப் போதும்சரியாயிடும். … பூரான், தேள் கடிக்குக் கூட இந்தச் சாறுதான் கைகண்ட மருந்து.”

தோல்ல சொறி சிரங்கு, தேமல் இருந்தாக் கூட, தேங்காய் எண்ணெயில் வெற்றிலையைப் போட்டுக் காய்ச்சி, அந்த எண்ணெயைத் தடவிட்டு வந்தா சீக்கிரமே தோல் சரியாயிடும்.”

வெத்தலை கூட துவர்ப்பான பாக்கு சேர்க்கிறது பித்தத்தைப் போக்குறதுக்காக. சுண்ணாம்புல இருக்கிற காரம், வாதத்துக்கு நல்லது. வாயுவைக் கட்டுப் படுத்தும். வெத்தலையோட உறைப்பு கபத்தை உண்டு இல்லைன்னு பண்ணிடும்.”

சுண்ணாம்பு அதிகமா சேர்த்தா வாய் பொத்துக்கும்.

-------------------------------------------------------------------------------
ஆதாரம்

  • ரேவதி  அவர்களின் வைத்திய அம்மணியும், சொலவடைவாசம்பாவும், - பக்.  30 - 31.

No comments:

Post a Comment

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD