மருத்துவக் குறிப்பு - 1 - பழங்கள்

மருத்துவக் குறிப்பு - 1

பழங்கள் - திராட்சை 

தொகுப்பு - திரு. ஜோசப்ராஜ், தஞ்சை



திராட்சையில் பல வகை உண்டு. எல்லாமே நல்லது தான். கறுப்புத் திராட்சை என்பது ஜூஸ் போட நன்றாக இருக்கும். பன்னீர் திராட்சை சாப்பிடுவதற்குப் பொருத்தமாக இருக்கும்

திராட்சையினை உணவுக்கு முன்னதாக சாப்பிட வேண்டும்.

திராட்சையினால் குடலும் இரத்தமும் சுத்தமாகிறது. சளி, வாயு, உப்புகள், கொழுப்புக்கள் முதலியன கரைந்து வெளியேறும். புற்று நோய் செல்களைக் கூட கரைத்து வெளியே கொண்டு வந்து தள்ளிவிடும் என்று சொல்லப்படுகிறது.

கிரேப் சுகர் எனப்படும் இதன் குளுக்கோஸ் உயர்ந்த தரமுடையது. குழந்தைகளுக்கு 4 மாதத்திலிருந்து திராட்சை ஜூஸ் தரலாம். சம அளவு தண்ணீர் கலந்து தர வேண்டும். முதலில் இரண்டு ஸ்பூன் என்ற அளவுக்குக் கொடுத்தால் போதும்

திராட்சைத் தோல், கொட்டை ஆகியவற்றை சாப்பிடு விழுங்க வேண்டிய அவசியம் இல்லை. அதிலுள்ள சதையும் சாறும் மட்டும் போதும். திராட்சையை நன்றாகக் கழுவி சாப்பிட வேண்டும். உப்பு போட்ட நீரிலும் ஒருமுறை முதலில் கழுவலாம்.

No comments:

Post a Comment

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD