மருத்துவக் குறிப்பு - 4 - மணத்தக்காளிக் கீரை

மணத்தக்காளிக் கீரை



  • மணத்தக்காளி, வாய்ப்புண், வயிற்றுப் புண் அனைத்தையும் சரியாக்கும். சித்திரை வெயிலில் நிதமும் மணத்தக்காளிக் கீரை சாப்பிடுவது நல்லது.
  • விரைவாக ஜீரணமாகாது என்பதனால் பொதுவாக கீரைகளை இரவில் உண்ணக்கூடாது. ஆனால் மணத்தக்காளிக் கீரையச் சேர்த்துக்கலாம்
  • பருப்பு சேர்க்காம, கீரையை நல்லா வதக்கி புளி, உப்பு, வெங்காயம், தக்காளி, பூண்டு, பெருங்காயம், வத்த மிளகாய் சேர்த்துத் தொவையல் மாதிரி அரைச்சு, சுடு சாதத்தோடு சேர்த்துச் சாப்பிட - நல்லாத் தூக்கமும் வரும், உடம்புக்கு அழகையும் கொடுக்கும்.
  • நெஞ்சு வலிக்கு - ஒரு கட்டு மணத்தக்காளிக் கீரைய உதிர்த்து, நாலு பல் பூண்டு, சிட்டிகை மஞ்சள் தூள் சேத்து வேக வைச்சு சாப்பிட்டா இதய நோய் பிரச்சனை வராதுகீரையில கொஞ்சம் உப்புச் சேத்து சாப்பிட்டு வந்தா நாள் பட்ட வாத நோய் கூட ஓடிப் போகும்.
  • சிறு நீரகம் மற்றும் கல்லீரல் நோய்க்கு - அரைக் கிலோ மணத்தக்காளிக் கீரையை நிழல்ல உலர்த்தி, 10 கிராம் மிளகு, சீர்கம் 20 கிராம், சொம்பு 20 கிராம் சேத்து நல்லாப் பொடிச்சுக்கணும். இந்தப் பொடியை தினமும் ரெண்டு வேளை சாப்பாட்டுக்கு முன்னால சாப்பிட்டு வந்தா, கல்லீரல் சிறுநீரகம் ரெண்டுமே ஸ்ட்ராங்கா ஆயிடும். குடல் நோவு, நீரிழிவு, வாய்வுக் கோளாறும் குணமாயிடும்.
  • வாய்க்கசப்பு இருக்கவங்க, புள்ளத்தாச்சி, குழந்தை பெத்த பச்சை உடம்புக்காரி, இந்த மணத்தக்காளி வத்தலை எண்ணெயில் வறுத்து, சூடான சாதத்துல போட்டு நெய் விட்டுச் சாப்பிடலாம். நல்லா செரிமானமாகும். நல்லாப் பசி எடுக்கும்.  
  • ஒரு கைப்பிடி கீரையோட 10 மிளகு, 3 திப்பிலி, 4 சிட்டிகை மஞ்சள் சேத்து விழுதாக அரைச்சுத் தேன்ல கலந்து சாப்பிட்டா நெஞ்சுல கபம், சளி, இருமல், எல்லாம் பறந்திடும்
-----------------------------------------------------------------------------------
ஆதாரம்

  • ரேவதி  அவர்களின் வைத்திய அம்மணியும், சொலவடைவாசம்பாவும், - பக்.  32 - 35.

No comments:

Post a Comment

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD