கடவுள்


கடவுள்

ஜோசப் அமல்ராஜ் - சென்னை
---------------

ஆம்
எங்கும் வியாபித்திருப்பவன்தான் விண்ணவன்!
எங்கும் கடந்து கிடப்பவன்தான் கடவுளவன்!
அனைத்தையும் ஆண்டு நடத்துபவன்தான் ஆண்டவன்!


மனிதன் இருக்குமிடமெல்லாம்
கடவுளும் இருக்கிறார்!
படைப்பு இருக்குமிடமெல்லாம்
படைத்தவனும் இருக்கிறான்!


அனைத்தையும் கடந்தவனல்ல கடவுள்!
எனெனில்...
அனைத்துமே கடவுள்!

காரணங்களைக் கடந்தவனல்ல கடவுள்!
ஏனெனில்...
காரணங்களே கடவுள்!


அடுத்தவர் விருப்பப்படிதான்
வாழ வேண்டுமென்றால்...
வீழ்ந்து விடு!
ஆண்டவன் விருப்பப்படி தான்
வாழ வேண்டுமென்றால்....
அடங்கி விடு!

          எங்குமிருக்கும் ஆண்டவன்...
அங்கிருக்கிறானோ இங்கிருக்கிறானோ இல்லையோ,
உன் அகத்திலிருக்கிறானா இல்லையா
என்பதுவே பிரச்சனை!

ஆண்டவன்
ஆலயங்களில் இருக்கிறாரோ இல்லையோ
அவலத்திலிருக்கும்
அனைவரிடத்திலும் இருக்கிறான்!

நினைவுக்கு வருகிறதா
அன்னை மரியாவின் புகழ்ப்பாடல்
எனது ஆண்டவர்....
உள்ளத்தில் செருக்குடன் சிந்திப்போரை
சிதறடித்து வருகிறார்.
வலியோரை அரியணையினின்று
தூக்கி எறிந்துள்ளார்.
தாழ்நிலையில் இருப்போரை
உயர்த்துகிறார்.

பசித்தோரை நலன்களால் நிரப்பியுள்ளார்.
செல்வரை வெறுங்கையராய்
அனுப்பிவிடுகிறார்!

பகட்டானவன் கைகளுக்கு
கடவுள் எட்ட மாட்டார்!

கடவுளின் திட்டத்தில்
ஆக்கம் என்பது அழிவே!
அழிவு என்பதும் ஆக்கமே!

கடவுளின்
அன்றைய தலைகீழ்ப் புரட்டிப் போடலே
மக்களின்
இன்றைய புதை படிம எரி பொருட்கள்!

பால்கனியில் நிக்க முடியலேயின்னு
பதட்டப்படாதே!
தெருவுல நிக்க வைக்கலியேன்னு 
பதப்படு!

கடவுளை
'அப்பா....தந்தாய்! என்றழைப்பதே
அபாரமான கொடைதான்!

நீ கடவுளிடம் 
உனக்கு வேண்டியதையெல்லாம் வேண்டினாலும்,
அவர் உனக்கு...
வேண்டியதை மட்டுமே தருவார்!

கடவுளைத் தேடி அலைவோர்க்கு
கடமையைச் செய்பவர்களெல்லாம் கடவுளே!

கடவுளைக் காண்பதும்
கடவுள் தன்மையைக் காண்பதும் வெவ்வேறல்ல!

கடமையைச் செய்தால் கடவுளாகலாம்;
கடமைக்கு செய்தால்..?
கடமையைக் கச்சிதமாய் செய்து விடு!
மீதியைக் கடவுளிடம் விட்டுவிடு!

தரணியெங்கும் தாயைக் காண்பவன்...
தடுமாறி நிற்க மாட்டான்!

அகிலமெங்கும் அம்மாவைக் காண்பவன்...
ஆன்மீகத்தில் அலறி நிற்க மாட்டான்.

No comments:

Post a Comment

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD