மருத்துவக் குறிப்பு - 8 - நெல்லி

     “நெல்லி

  • நம்ம ஊர்ல அதிகமா இருப்பது அரை நெல்லிக்காய்தான்
  • தினம் ஒரு நெல்லிக்காயைச் சாப்பிட்டு வந்தா உடம்பில் தெம்பு கூடி இருக்கும். தொற்று நோய் எதுவும் எளிதில் வராது.
  • வாய் துர்நாற்றம் வீசினா, நெல்லிக்காயைக் காய வெச்சு அந்தப் பொடியை வாயில் போட்டுக் கொப்புளிக்கணும்
  • கிணத்துத் தண்ணியில நெல்லிக் கிளை, இலையைக் கொஞ்சம் போட்டா தண்ணீர் இனிப்பா இருக்கும். இந்தத் தண்ணியில கண்ணைக் கழுவிட்டு வந்தா, கண் சிவக்கிறது, வலி, புண் எல்லாமே சரியாயிடும். சமையலும் ருசியா இருக்கும்.
  • பச்சை நெல்லிக்காய் கூட துளசி, கடுக்காய் தோலு, கறிவேப்பிலை எல்லாத்தையும் சேர்த்து அரைச்சுக்கணும். இந்த விழுதைத் துணியில மூட்டை மாதிரி உத்திரத்துல தொங்க விடணும். அதிலேர்ந்து துளித்துளியாய் சாறு வடிந்து விழும். இந்தச் சாறு அளவுக்கு மூணு மடங்கு தேங்காய் எண்ணெய் கலந்து காய்ச்சிக்கணும். இந்த எண்ணெயைத் தெனமும் தலைக்கு தடவிட்டு வந்தா முடி கொட்டுறது நின்னுடும். முடியும் அடர்த்தியா வளர ஆரம்பிச்சுடும்.”


    • இள நரைக்கு: 20 நெல்லிக்காய் கூட எலுமிச்சை இலையைச் சேர்த்து நல்லா அரைச்சு பாலில் கலந்து, எங்கெல்லாம் நரை இருக்கோ, அங்க தடவி, ஒரு மணி நேரம் நல்லா ஊற வைக்கணும். மிதமா சூடு தண்ணீர்ல வாரம் ஒரு முறை குளிச்சுட்டு வந்தா, இள நரை இருந்த இடம் தெரியாம மறைஞ்சிடும்.”
    • சர்க்கரை நோய்: நெல்லிச் சாறு கூட பாகற்காய் சாறைச் சேர்த்துச் சாப்பிட்டால், சர்க்கரை நோயைத் தடுத்திடும்.”
    • நெல்லிக் காய் உடம்புக்குக் குளிர்ச்சி. உடல் உஷ்ணத்தைத் தணிக்கும். மலமிளக்கி, சிறு நீர் பெருக்கியாகவும் இருக்கும்.“
---------------------------------------------------------------------------------

ஆதாரம்
  • ரேவதி  அவர்களின் “‘வைத்தியஅம்மணியும்,  ‘சொலவடைவாசம்பாவும்!,” - பக்பயன்கள் 48  - 52.

மருத்துவக்குறிப்பு - 7 - எலுமிச்சை

எலுமிச்சை



  • எலுமிச்சம் பழத்தோட வாசனை நம்மைப் புத்துணர்வு பெறச்செய்யும். யாரைச் சந்திக்கப் போனாலும் எலுமிச்சையோட போனா நம்மிடம் மகிழ்ச்சியோட பேசுவாங்க.
  • அடிக்கிற அனல் காத்துல உஷ்ணக் கட்டி, மூல உபத்திரவம், பித்தம், தலை சுத்தல், சிறுனீர் கழிக்க முடியாமப் போறது, மலச்சிக்கல், வயித்துப் போக்குன்னு எல்லா பிரச்சனையும் வந்திடுதே. அதுக்கெல்லாம் எலுமிச்சைதான் சர்வரோக நிவாரணி.”
  • ரெண்டு மூணு நாள் எலுமிச்சை சாதத்தைச் சாப்பிட்டு வந்தா மூல நோயைக் கட்டுப் படுத்தலாம்.
  • எலுமிச்சைச் சாறுல மோர், கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயத்தைப் போட்டு, குடிக்கலாம். உடம்பு குளிர்ச்சியாயிடும்.”
  • சீயக்காயுடன் எலுமிச்சம் பழச்சாறைக் கலந்து தேய்ச்சு குளிச்சா தலைமுடி ஆரோக்கியமா இருக்கும். சித்தம் தெளிய, எலுமிச்சைப் பழத்தைத் தலையில் தேய்ச்சு குளிச்சாப் போதும். மனசு அமைதியடையும்.
  • தேள் கொட்டின இடத்துல எலுமிச்சம் பழத்துண்டை வெச்சு தேய்ச்சா, தேள் விஷம் பட்டுன்னு குறையும்.
  • உடல் எடையக் குறைக்கனும்னு நினைக்கிறவங்க எலுமிச்சைச் சாற்றுடன் தேன் கலந்து வெறும் வயித்துல காலையில குடிச்சுட்டு வந்தா எடை குறைஞ்சிடும். சுறுசுறுப்பா வேலை செய்ய முடியும்.
  • பரு வந்த வடு மாற - “தண்ணீரை நல்லா கொதிக்க வெச்சு, அதுல அரை மூடி எலுமிச்சம் பழத்தைப் பிழிஞ்சு, ஒரு நாள் விட்டு ஒரு நாள் ஆவி பிடிச்சுட்டு வந்தா ரெண்டு வாரத்திலேயே மாசு மரு இல்லாம முகம் பளிங்கு மாதிர் மாறிடும்
  • பூவரசங்காயை எலுமிச்சம் பழச்சாற்றில் அரைத்து தேமல் உள்ள இடத்தில் பூசி வந்தால் தேமல் மறைஞ்சிடும்.
  • எலுமிச்சம் பழச்சாற்றில தண்ணீரைக் கலந்து நாலு மணி நேரத்துக்கு ஒரு முறை குடிச்சுட்டு வந்தா நீர்க்குத்தல், நீர் எரிச்சல், வயித்துக் கடுப்பு கூட சரியாகிவிடும்.

-------------------------------------------------------------------------------------------------

ஆதாரம்

  • ரேவதி  அவர்களின் “‘வைத்தியஅம்மணியும்,  ‘சொலவடைவாசம்பாவும்!,” - பக்பயன்கள் 44  - 47.

மருத்துவக் குறிப்பு - 6 - புதினா

புதினாவின் பயன்கள்


  • புதினா சோர்வைப் போக்கும். வெயில் காலங்களில் பசியெடுக்காது. பசி எடுப்பதற்கும் புதினா நல்லது
  • புதினாவை ஆய்ஞ்சு, அரைச்சு, ஒரு தேக்கரண்டி எலுமிச்சைச் சாறு தேன் சேர்த்து, காலையில் வெறும் வயிற்றில் குடிச்சுட்டு வந்தா, காலை நேரப் பித்த மயக்கம், தலைவலி, காய்ச்சல், சிறு நீர்ப்பைகளில் உள்ள கல்லடைப்பு, வயிறு, குடல் சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் தீர்வு கிடைக்கும்.
  • பிரியாணியோடு புதினா சட்னி சாப்ப்பிடுவது நல்லது
  • டீத்தூளுக்குப் பதிலாக, புதினாவை உலர வைத்துப் பொடி செய்து, புதினா டீ யாகக் குடிக்கலாம். இதனால் சுறுசுறுப்புக் கிடைக்கும்.
  • புதினாப் பொடியை தண்ணீரில் பொட்டு, உப்பு சேர்த்து கஷாயமாகச் செய்து குடித்தால், கரகரங்கிற குரல் கூட இனிமையாக மாறிடும். தொண்டை கரகரப்பு போயிடும். மாதவிடாய்க் கோளாரைச் சரிசெய்யும்.
  • புதினாவைத் தண்ணீர் விடாமல் அரைச்சு, தலைவலி, தசை வலி, நரம்புவலி, கீல்வாத வலி எங்கெல்லாம் இருக்கோ அங்கே பத்துப் போட்டால் வலி மறையும்.
  • புதினா கூட கறிவேப்பிலை சேத்து வதக்கி, உளுத்தம் பருப்பு , இரண்டு காஞ்ச மிளகாய் போட்டு வறுத்து, புளி, உப்பு சேர்த்து அரைச்சு, துவையலைப் போட்டு பிசைஞ்சு சாப்பிட்டால், - வாய்க்கசப்பு, வயித்து வலி, காய்ச்சல் இருக்காது.
  • வறட்டு இருமல், சளி, ஆஸ்துமா, எலும்புருக்கின்னு அத்தனைக்கும் புதினாவில் வைத்தியம் இருக்கு. புதினாச் சாறோட, வினிகர், தேன், காரட் சாறு கலந்து மூணு வேளை குடிச்சாப் போதும், உடனே குணம் கிடைக்கும்
  • மூச்சு விடக் கஷ்டப் படுபவர்கள், புதினா கூட இஞ்சி, மிளகு சேத்துப் பச்சடி மாதிரி செஞ்சு சாப்பிடலாம்.
  • தொட்டில கூட புதினாவை வளர்த்துக்கலாம். புதினாவின் வாசனைக்கே பாம்பு, தேள், பூரான் எதுவும் வீட்டுக்குள் அண்டாது
----------------------------------------------------------------------------------------------

ஆதாரம்

  • ரேவதி  அவர்களின் “‘வைத்தியஅம்மணியும்,  ‘சொலவடைவாசம்பாவும்!,” - பக்பயன்கள் 40  - 43.

விரும்பிப் படிக்கப்பட்டவைகள்

ஆன்மிக மலர் - செப்டம்பர் 2021

 ஆன்மிக மலர்  செப்டம்பர் 2021 தரவிறக்கம் - DOWNLOAD